விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அன்றிய வாணன் ஆயிரம்*  தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை* 
  மின் திகழ் குடுமி வேங்கட மலைமேல்*  மேவிய வேத நல் விளக்கை*
  தென் திசைத் திலதம் அனையவர் நாங்கைச்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
  மன்றுஅது பொலிய மகிழ்ந்து நின்றானை*  வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அன்றியலாணன் ஆயிரம் தோளும் துணிய - கோபித்து எதிரிட்ட பாணாஸுரனுடைய ஆயிரந்தோள்களும் அறுத்துவிழும்படி
அன்று ஆழி தொட்டானை - அக்காலத்தில் திருவாழியைப் பிரயோகித்தவனும்
மின்திகழ் குடுமி வேங்கடம் மலை மேல் மேவிய - ஒளிவிளங்கானின்ற சிகரத்தையுடைய திருவேங்கடமலையின் மேல் பொருந்தியிருப்பவனும்
வேதம் கல் விளக்கை - வேதங்களால் காணக்கூடிய நல்ல விளக்கானவனும்,
தென்திசை திலதம் அனையவர் - தென்திசைக்குத் திலகம் போன்ற மஹான்கள் வாழ்கிற

விளக்க உரை

மன்றதுபொலிய – பலர்திரட்சியாகக் கூடுமிடத்திற்கு ‘மன்று’ என்று பெயர்; ‘நாங்கை நாலாயிரம்’ என்ற பழமொழியின்படி நாலாயிரம் ஸ்ரீவைஷ்ணவர்கள் வாழ்ந்தவிடமாயிருந்தது பற்றி “மன்றதுபொலிய” என்கிறார் என்னலாம்: (அது-முதல்வேற்றுமைச்சொல்லுருபு.)

English Translation

Then in the yore to vanquish the thousand-armed Bana, he wielded his gold discus. He is the resident Venkatam Lord who shines like a beacon in Vedic chants, Stars-of-the-South' seers residing in Nangur, -Semponse! Koyil is in the midst. Seeing my precious Lord, granting prosperity, I have found my spiritual elevation.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்