விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வாளை ஆர் தடங் கண் உமைபங்கன்*  வன்சாபம் மற்றுஅதுநீங்க* 
  மூளைஆர்சிரத்து ஐயம் முன்அளித்த*  எம்முகில் வண்ணன் உறைகோயில்*
  பாளை வான் கமுகு ஊடு உயர் தெங்கின்*  வண்பழம் விழ வெருவிப் போய்* 
  வாளை பாய் தடம் சூழ்தரு நாங்கூர்*  வண்புருடோத்தமமே.    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பாளை - பாளைகளை யுடைத்தாய்
வான் - ஓங்கியிருந்துள்ள
கமுகு ஊடு - பாக்கு மரங்களினிடையே
உயர் - உயர்ந்திருக்கின்ற
தெங்கின் - தென்னை மரங்களினுடைய

விளக்க உரை

பாக்குச் சோலைகளின் நடுவே தென்னைமரங்கள் ஓங்கி வளர்ந்திருக்கின்றன; அவற்றினின்று பெருத்த காய்கள் இற்றுக் குளங்களிலே விழுகின்றன; அவற்றின் கடுமையான ஓசையைக் கேட்டவாறே மீன்கள் ‘தங்களை இரையாகக் கொள்வதற்கு ஏதோவொன்று வந்து குதித்துவிட்டது’ என்று பிரமித்து வேறிடந்தேடித் துள்ளித் தாவுகின்றனவாம். எம்பெருமானிடத்தில் அஸ்தாநே பயசங்கை பண்ணிக் கலங்கும் பரிலர்களின்படிக்குப் போலியென்னலாம்.

English Translation

Siva, -who bears his wide eyed Dam Parvati on his one half, -was cursed to carry the skull of Brahma as a begging bow! In this hand. Out benevolent cloud-hued Lord filled it with the sap-of-his-heart blood and rid him of the curse. He resides at Nangur, -where Areco trees grow fall, with coconut trees in between; the coconut drops from the tree, into the lake where startled the fish jump and dance, - in the temple of Van-Purushottamam.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்