விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  போது அலர்ந்த பொழில் சோலைப்*  புறம் எங்கும் பொரு திரைகள்* 
  தாது உதிர வந்து அலைக்கும்*  தட மண்ணித் தென் கரைமேல்*
  மாதவன் தான் உறையும் இடம்*  வயல் நாங்கை*  வரி வண்டு 
  தேதென என்று இசை பாடும்*  திருத்தேவனார்தொகையே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தாது உதிர - பூக்களின் தாதுகள் உதிரும்படியாக
பொரு திரைகள் வந்து அலைக்கும் - செறிந்த அலைகள் வந்து வீசப்பெற்ற
தடம் மண்ணி - பெரியமண்ணியாற்றினுடைய
தென் கரைமேல் - தெற்குக் கரையின் மேலே,
மாதவன் தான் உறையும் இடம் - மாதவப்பெருமாள் நித்ய வாஸம் செய்தருளுமிடம் (எதுவென்றால்,)

விளக்க உரை

இத்திருப்பதியின் திருநாமம் “மாதவப்பெருமாள் ஸந்நிதி” என்றும் ப்ரஸித்தமாக வழங்கிவருதலால் “மாதவன் தானுறையமிடம்” என்றார். தேதென - இசைக்குறிப்பு.

English Translation

In the fertile fields of Nangur, bees sing ‘Te-tena’, in sweet modes. The mighty river Manni flows by, lashing waves that spill the pollen from lotus thickets. On the Southern banks of the river, the Lord resides permanently in Tiruttevanar Togai.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்