விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சென்று சினவிடைஏழும், படஅடர்ந்து*  பின்னை செவ்வித்தோள் புணர்ந்து, உகந்த திருமால்தன் கோயில்* 
  அன்று அயனும் அரன்சேயும், அனையவர்கள் நாங்கூர்*  அரிமேய விண்ணகரம், அமர்ந்த செழுங்குன்றை*
  கன்றிநெடுவேல் வலவன், மங்கையர்தம் கோமான்*  கலிகன்றி ஒலிமாலை, ஐந்தினொடு மூன்றும்* 
  ஒன்றினொடும் ஒன்றும், இவை கற்றுவல்லார்*  உலகத்து உத்தமர்கட்கு உத்தமர்ஆய் உம்பரும் ஆவர்களே. (2)    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அரிமேய வண்ணகரம்              -   அரிமேய விண்ணககரமென்னுந் திருப்பதியில்
கற்றுவல்லார்                                -   ஓதி யுணர்ந்து ஸேவிக்க வல்லவர்கள்
உலகத்து                                           -   இவ்வுலகத்திலே
உத்தமர்கட்கு உத்தமர் ஆய்  -   மிகவம் உத்க்ருஷ்டர்களா வாழ்ந்திருந்து (பின்பு)
உம்பரும் ஆவர்கள்                    -   நித்யஸூரிகளோடு சேர்ந்வர்களுமாவர்

விளக்க உரை

இப்பாசுரத்தில் “ஐந்தினொடு மூன்றும் ஒன்றினொடு மொன்று மிவை” என்றது ஸாபிப்ராயம் அதாவது - க்ருஷ்ணவதார சேஷ்டிதங்களைச் சொல்லுகின்ற பாசுதரங்கள் ஐந்தும், நரஸிம்ஹாவதாரம் வாமநாவதாரம், ராமாவதாரம் ஆகிய மூன்றவதாங்களைப் பற்றிப் பேசுகின்ற பாசுரங்கள் மூன்றும் அர்ச்சாவதாரபரமான முதற்பாட்டு ஒன்றும், பயனுரைத்த ஈற்றுப்பாட்டு ஒன்றும் ஆகப் பத்துப்பாட்டு ரங்களென்கை, இரண்டு, மூன்று, ஏழு, எட்டு, ஒன்பதாம் பாசுதரங்கள் கிருஷ்ணவதார விஷயங்கள் நான்கு ஐந்து ஆறாம் பாசுரங்கள், முறையே, நரஸிம்ஹ வாமந ராமாவதார விஷயங்கள்.

English Translation

The sharp-speared Mangai king Kalikanri has sung this garland of sweet Tamil songs on the Lord Tirumal who subdued seven bulls for the pleasure of Nappinnai’s soft embrace. He resides in Nangur’s Arimeya Vinnagaram with Vedic seers Brahma-like radiance and Subrahmanya-like beauty. Those who learn and master it will be the best among good men and also become counted among the celestials.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்