விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கண்டவர்தம் மனம்மகிழ, மாவலிதன் வேள்விக்*  களவுஇல்மிகு சிறுகுறள்ஆய், மூவடிஎன்று இரந்திட்டு* 
  அண்டமும் இவ்அலைகடலும், அவனிகளும்எல்லாம்*  அளந்தபிரான் அமரும்இடம், வளங்கொள்பொழில்அயலே*
  அண்டம்உறு முழவுஒலியும், வண்டுஇனங்கள்ஒலியும்*  அருமறையின்ஒலியும், மடவார் சிலம்பின் ஒலியும்* 
  அண்டம்உறும் அலைகடலின், ஒலிதிகழும் நாங்கூர்*  அரிமேய விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கண்டவர் தம் மனம் மகிழ - பார்த்தவர்களெல்லாருடைய மனமும் ஆநந்தமடையும்படி
மாவலி தன் வேள்வி - மஹாபலியின் யாகபூமியிலே
களவின் மிகு சிறு குறள் ஆய் - வஞ்சனை மிகுந்த சிறுத்த வாமநரூபியாய்க் கொண்டு
மூ அடி என்று இரந்திட்டு - மூவடிநிலம் தா என்று யாசித்து
அண்டமும் - மேலுலகங்களையும்

விளக்க உரை

English Translation

Then in the yore, the Lord came to Mabali's great Sacrifice as a beautiful innocent-looking manikin-lad, pleasing the hearts of all who saw him. He asked for a gift of three strides of land, then grew and took the whole Earth, the seven seas, the seven continents and all else. He resides permanently in Nangur amid fertile fields, where the sounds of musical instruments, the hum of bees, the chanting of the Vedas, the jingle of anklets and the roar of the ocean rend the air. Offer worship to him in Arimeya Vinnagaram, O Frail Heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்