விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  திருமடந்தை மண்மடந்தை, இருபாலும் திகழத்*  தீவினைகள் போய்அகல, அடியவர்கட்கு என்றும்அருள்நடந்து* 
  இவ்ஏழ்உலகத்தவர் பணிய* வானோர் அமர்ந்துஏத்த இருந்தஇடம்*
  பெரும்புகழ் வேதியர் வாழ்தரும்இடங்கள் மலர்கள், மிகுகைதைகள் செங்கழுநீர்*  தாமரைகள் தடங்கள் தொறும், இடங்கள் தொறும் திகழ* 
  அருஇடங்கள் பொழில்தழுவி, எழில்திகழும் நாங்கூர்*  அரிமேய விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!  (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

இருபாலும் திருமடந்தை மண் மடந்தை திகழ - இரண்டு பக்கங்களிலும் ஸ்ரீதேவி பூதேவிகள் விளங்க நின்று
அடியவர்கட்கு தீ வினைகள் போய் அகல - ஆச்ரிதர்பக்கலில் கொடிய பாவங்கள் தொலையும் படியான
என்றும் அருள் நடந்து - எப்போதும் க்ருபைபண்ணி
இவ் ஏழ் உலகத்தவர் பணிய - இந்த ஸப்த லோகங்களிலுள்ளாராலும் ஆச்ரயிக்கப்பெற்று
வானோர் அமர்ந்து ஏத்த - நித்யஸூரிகள் கால் பொருந்தில் தோத்திரம் பண்ணப் பெற்று

விளக்க உரை

அருவிடங்கள் உருவமற்ற வஸ்துவானது ‘அரு’ எனப்படும்; எனவே ஆகாசத்தைக் சொன்னதாயிற்று. அரிமேய விண்ணகரம் ஹரித் ஹரதி பாபாநி என்கிறபடியே அடியவர்களின் பாபங்களைப் போக்குவதனாலே ஹரியெனப்படுகிற எம்பெருமான் நித்யவானம் பண்ணப்பெற்ற திவ்விய தலம் என்கை.

English Translation

Then in the yore, the Lord with Sri-Dame and Bhu-Dame on either side walked on the Earth showering his grace, ridding the world of evil and protecting his devotees. He is served by the seven worlds and worshipped by the celestials. He resides permanently in Nangur where Vedic seers live, amid fragrant groves and wetlands fenced by screwpine, lotus ponds in every direction, and trees growing tall. Offer worship to him in Arimeya Vinnagaram, O Frail Heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்