விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கொலைப் புண் தலைக் குன்றம் ஒன்று உய்ய*  அன்று கொடு மா முதலைக்கு இடர்செய்து கொங்கு ஆர்* 
  இலை புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு*  அணைந்திட்ட அம்மான் இடம் ஆள் அரியால்*
  அலைப்புண்ட யானை மருப்பும் அகிலும்*  அணி முத்தும் வெண் சாமரையோடு பொன்னி* 
  மலைப் பண்டம் அண்ட திரை உந்தும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஆள் அரியால் - வீரச் சிங்கங்களாலே
அலைப்புண்ட - ஸம்ஹரிக்கப்பட்ட
யானை - யானைகளினுடைய
மருப்பும் - தந்தங்களையும்
அகிலும் - அகில் மரங்களையும்

விளக்க உரை

ஸ்ரீகஜேந்திராழ்வானுடைய துயரைத் தீர்த்தது மாத்திரம் கீழ்ப்பாட்டிற் சொல்லிற்று; அவ்வளவில் ஆழ்வார்த்ருப்திபெறுவரோ; எம்பெருமான் ஆச்ரிவிரோதிகளைக் களைந்தொழித்தால் அந்த ஸந்தோஷத்திற்குப் போக்குவீடாகப் பிராட்டி பஹுமானம் பண்ணுவதொன்றுண்டு; அதாவது திருமுலைத்தடங்களாலே அணையவமுக்கிக் கட்டுதல். ஸ்ரீராமபிரான் கரதூஷணாதிகளைக் கொன்றெழித்து மீண்டபோது இப்படிப்பட்ட வெகுமதியைப் பிராட்டிசெய்தமை ஸ்ரீராமயணத்தில் விளங்குமே: “தம்ஸ்ரீ த்ருஷ்டுவா சத்ருஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம்-பபூவ ஹ்ருஷ்டா வைதேஹீ பர்த்தாரம் பரிஷஸ்வஜே“ என்னா நின்றது. அப்படியே, ஸ்ரீகஜேந்திர விரோதியான முதலையைத்துணித்துச் சென்றபின்பு பிராட்டி செய்த ஸத்காரத்தை ரிஷிகள் சொல்லா தொழிந்தாலும் அக்குறைதீர ஆழ்வார் தாமருளிச்செய்னிறார்- “கொடுமா முதலைக்கு இடர் செய்து புண்டரிகத் தவளின்ப மன்போடணைந்திட்ட வம்மான்” என்கிறார். கொலைப்புண்தலைக்குன்றம்= ‘குன்றம்’ என்றது உவமவாகு பெயரால் யானையை உணர்த்தும்; யானைக்குக் கொலைத் தொழில் நிகழ்த்துவதும், மாவட்டியின் குத்தலினால் புண் ஆறாத தலையையுடைத்தாயிருத்தலும் சாதியியல்பென்று கொண்டு இவ்விசேஷணங்களிடப்பட்டன.

English Translation

Then in the yore the Lord saved the heavy footed elephant in distress and gave misery to the terrible crocodile. He takes the lotus-dame Lakshmi in his loving embrace and enjoys her. He resides in Nangur where Ponni, the river Kaveri, brings elephant tusks, fragrant Agil wood, pearls, white whisk and other precious mountain produce on its waves, as offering to the Lord. Offer worship in Manimadakkoyil, O Heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்