விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  முற்றிலும் பைங் கிளியும்*  பந்தும் ஊசலும் பேசுகின்ற*    
  சிற்றில் மென் பூவையும்*  விட்டு அகன்ற செழுங் கோதைதன்னைப்*
  பெற்றிலேன் முற்று இழையை*  பிறப்பிலி பின்னே நடந்து* 
  மற்று எல்லாம் கைதொழப் போய்*  வயல் ஆலி புகுவர்கொலோ!    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

முற்றிலும் - (வினையாட்டுக் கருவியான சிறுமுறத்தையும்
பைங்கிளியும் - பச்சைக் கிளியையும்
பந்தும் - பந்தையும்
ஊசலும் - ஊஞ்சலையும்
சிற்றில்பேசுகின்ற - சிறிய கூட்டிலிருந்து பேசுகிற

விளக்க உரை

என் மகள் பருவம் முற்றினவளல்லள்; நேற்றுவரையில் விளையாட்டுக் கருவிகளான முற்றில், கிளி, பந்து, ஊசல், பூவைப்பட்சி முதலியவற்றை ஒரு நொடிப்பொழுவதும் விட்டுப் பிரியா திருந்தவள். இப்படிப்பட்ட விவன் இன்புறுமிவ் விளையாட்டுடையானான பெருமான் வந்தழைத்தவாறே தனது விளையாட்டுக் கருவிகளையெல்லாம் விட்டொழிந்து அவனோடு விளையாடுவதையே தனக்கு ப்ராப்தமாகக் கொண்டு உடன்சென்றுவிட்டாள். இருவருமாய்ச் செல்லும்போது வழியிடையே மஹோத்ஸவமாகவன்றோ நிகழப்போகிறது; இருவரையும் நோக்கிக் கையெடுத்துக் கும்பிடாதார் ஒருவரேனுமிருப்பரோ? பாவியேனாகிய நானொருத்தியேயன்றே இழந்தவள்; மற்றையோர் இழக்கமாட்டார்களே; அனைவருங் கைதொழச் செல்லுமிவர்கள் பாங்காக வயலாலியிற் சென்று சேரவேணுமே யென்கிறாள். முற்றில் - சிறுமுறம்; சிறு பெண்கள் விளையாட்டாகச் சிற்றிலிழைப்பதற்கு மணல்கொழிக்கும் கருவி இது; ‘முச்சல்’ என்று உலகவழக்குச் சொல். சிறு+இல். சிற்றில். பறவை வஸிக்கும் சிறிய கூட்டைச் சொல்லுகிறது இங்கு. செழுங்கோதை தன்வன = ‘கோதை’ என்று பூமாலைக்குப் பெயர்; பூமாலைபோல் ஸூகுமாரமான தன்மைவாய்ந்தவள்; நெஞ்சைக் கவருமவள் என்கை.

English Translation

We were like father and mother to her, alas, she had no thought of that. She preferred the embrace of Nappinnai’s lover with Long arms. With her lightning-thin creeper-thin waist, she walked all the way to where Punnai trees and Swan-pairs abound. Would they have entered the water-fed Tiruvali? O, Alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்