விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  என் துணை என்று எடுத்தேற்கு*  இறையேனும் இரங்கிற்றிலள்* 
  தன் துணை ஆய என்தன்*  தனிமைக்கும் இரங்கிற்றிலள்*
  வன் துணை வானவர்க்கு ஆய்*  வரம் செற்று அரங்கத்து உறையும்* 
  இன் துணைவனொடும் போய்*  எழில் ஆலி புகுவர்கொலோ!  (2)    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

இறையேனும் - கொஞ்சமாகிலும்
இரங்கிற்றிலன் - இரக்கங்கொண்டாளில்லை;
தன் துணை ஆய என்தன் தனிகைக்கும் - (இதுவரையில்) தனக்கு உதவியாயிருந்த நான் தனியே யிருப்பதற்காகவும்
இரங்கிற்றிலள் - இரக்கங் கொண்டாளில்லை;
வானவர்க்கு - தேவர்களுக்கு

விளக்க உரை

உலகத்தில் மக்களைப் பெற்று வளர்ப்பது ஏதுக்காக? நாம் தளர்ந்திருக்குங் காலத்திலே நமக்குத் துணையாவரென்றே. அப்படியிருக்கவும், என் மகள் எனது அர்த்தியைக்கணிசி யாமலும், பெற்றுவளர்த்த தாயைத் தனிப்பிடவிட்டுப் போகிறோமே யென்று விசாரப்படாமலும் விட்டொழிந்தாள். அவளோ பெரிய துணைவனைப் பிடித்துக்கொண்டாள்; ஆச்ரிதர்கட்காகத் தன் உடம்பை அம்புகட்கு இரையாக்கிக் காரியம் செய்யுமவன் என்று அவன் திறத்திலே யீடுபட்டு உடன் சென்றாள்; திருவரங்கம் பெரிய கோயிலில் திருக்கண்வளர்ந்தருளும் பெருமான் வந்து அழைத்தால் போகா திருக்கலாமோ வென்றும், இவனேயன்றோ நமக்கு இனிய துணைவனென்றும் நினைத்துச் சென்றுவிட்டாள்: செல்லிற் செல்லுக: இருவரும் வழியே சென்று வயலாலியிற் சேர்ந்திருக்கவேணுமே; அப்படி சேர்ந்திருப்பர்களோ, சேராதிருப்பர்களோ வென்று கவலைப்படுகின்றாள் . வரம் செற்று= இராவணன் நெடுநாள் தவம்புரிந்து வலியவரங்கள் பெற்றிருந்ததனால் ‘நமக்கு அழிவில்லை’ என்று செருக்குக்கொண்டு மனம்போன படி செய்து திரிந்தான்; அப்படிப்பட்டவனைத் தண்டிக்கவேண்டி அவன் பெற்றிருந்த வரத்தில் அகப்படாத மானிட வடிவமெடுத்துவந்து கொண்றொழித்ததனால் ‘வரஞ் செற்று’ எனப்பட்டது; பெற்றவரம் பாழாம்படியாக என்கை

English Translation

I brought her up for company. Alas, she had no thought of that. I lost out on her company. Alas, she had no thought of that either. The Lord who gives the gods his company destroyed the boon-blessed Lanka and resides in Arangam. Would the two have joined company and entered the radiant city of Tiruvali? O, Alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்