விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பண்டு இவன் ஆயன் நங்காய்!*  படிறன் புகுந்து*
  என் மகள்தன் தொண்டை அம் செங் கனி வாய்*  நுகர்ந்தானை உகந்து*
  அவன்பின் கெண்டை ஒண் கண் மிளிர*  கிளிபோல் மிழற்றி நடந்து* 
  வண்டு அமர் கானல் மல்கும்*  வயல் ஆலி புகுவர்கொலோ!       

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நங்காய் - பெண்ணே!,
இவன் - என் மகளைக்கொண்டுபோன விவன்
பண்டு - முன்பெல்லாம்
படிறன் - (பெண்களைத் திருடுவது முதலான) தீம்புகளைச் செய்கிற
ஆயன் - இடையனாயிருந்தவன்

விளக்க உரை

மற்றொரு அயல்வீட்டுப் பெண்மணாட்டி ‘அம்மா! கள்வன் கோல்யானறியேனென்று கதறினாயே, என்ன விசேஷம்?‘ என்று கேட்க, அவளுக்குச் சொல்லுகிறார் தாய். திருவாய்ப்பாட்டிலே “மச்சொடு மாளிகையேறி மாதர்கள் தம்மிடம் புக்குக் கச்சொடு பட்டைக் கிழத்துக் காம்புதுகி லவைகீறி, நிச்சலுந் தீமைகள்” செய்து கொண்டிருந்த கேபாலகிருஷ்ணனென்பவன் என்னகத்திலே புகுந்து என் மகளினது கொவ்வைக் கனிபோன்ற அதரத்தைப் பருகிநின்றான், பின்னை அவனுடனே என்மகள் புறப்பட்டுச் சென்றாள், சென்ற இருவரும் திருவாலிக்கேபோய்ச் சேர்ந்திருப்பர்களோ, அன்றி எங்கேனும் விரோதிவர்க்கமுள்ளவிடத்தே புகுந்திருப்பர்களோ அறகின்றிலேன் என்கிறார். படிறு – தீம்பு. கெண்டையொண்கண் மிளிர – வழியிலே செல்லும்போது அபூர்வமான பலபல பொருள்களைக் காண நேருமே, அவற்றைக் காணும்போது இவையென்ன இவையென்ன?‘ என்று காதலனைக் கண்ணாலேயே கேட்டுக் கொண்டு போவளாம். அதனைக் கருதியே “கெண்டையொண்கண் மிளிர“ எனப் பட்டதென்க. சில பொருள்களைப் பற்றி வாயாலுங்கேட்க நேருமையாலும் இனிய செஞ்சொற்களைப் பேசிக்கொண்டே வழி நடக்கவேண்டி யிருக்குமாகையாலும் “கிளிபோல்மிழற்றி நடந்து“ எனப்பட்டது.

English Translation

O Ladies! Earlier this fellow was a cattle-stealer. Today he entered and tasted the sweet nectar of my daughter’s red berry lips. With her innocent sparkling eyes made off after him cajoling like a parrot. Would they have entered the bee-humming nectared groves of fertile Tiruvali? O, Alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்