விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஓதி ஆயிரம் நாமமும் பணிந்து ஏத்தி*  நின் அடைந்தேற்கு*
  ஒரு பொருள் வேதியா! அரையா!*  உரையாய் ஒருமாற்றம் எந்தாய்!* 
  நீதி ஆகிய வேதமாமுனியாளர்*  தோற்றம் உரைத்து*
  மற்றவர்க்கு ஆதி ஆய் இருந்தாய்!*  அணி ஆலி அம்மானே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மாமுனியாளர் தோற்றம் - (அந்த வேதங்களிலுள்ள மந்திரங்களை தர்சநம் பண்ணினவர்களான) மஹர்ஷிகளின் வரலாற்றையும்
உரைத்து - வெளியிட்டவனாயும்
மற்றவர்க்கு ஆதி ஆய் இருந்தாய் - மற்றுமுள்ள எல்லார்க்கும் காரணபூதனாயு மிருக்குமவனே!
வேதியா - வேதமொன்றினாலேயே அறியத்தக்கவனே!
அரையா  - தேவாதி தேவனே!

விளக்க உரை

கீழ்ப் பாசுரங்களிலே “புகுந்தாயைப் போகலொட்டேன்” என்று இவர்தாம் சொல்லிவைத்தாலும், “உன் மனத்தா ன்னினைந்திருந்தாய்?” என்றும் “இனியென் திருக்குறிப்பே?” என்றும் அவன் திருவுள்ளத்தை யநுஸரித்து நிற்கவேண்டிய ஸவபவுண்மையை உணர்ந்தவாரன ஆழ்வார், ஸ்வரூபத்துக்குத் தகுதியாகவன்றே பேசவேணும்; அப்படியே பேசுகிறா ரிப்பாட்டில்; பல் பன்னிரண்டையுங் காட்டிப் பிரார்த்திக்கின்றார்; அடியேன் தேறியிருக்கும்படி உன் சோதிவாய் திறந்து ஒரு நல்வார்த்தை சொல்லவேணும்; கடற்கரையிலே நின்று “ந த்யஜேயம் கதஞ்சந” என்ற வார்த்தைலயயாவது தேர்த்தட்டிலே நின்று “மா சுச:” என்ற வார்த்தையையாவது அடியேனே நோக்கி யருளிச் செய்ய வேணுமென்கறார். நீ ஸ்வைதந்த்ரனாகையால் இன்று அநுக்ரரஹித்து வந்துசேர்ந்தது போலே நாளே நிக்ரஹித்து அகன்றுபோய் விடவுங்கூடும்; இங்ஙனே நான் சங்கித்துக் கலங்கியிருக்க வொண்ணாத என்னைத் தேற்றுவிக்கவேணு மென்கிறார்.

English Translation

O, Lord of beautiful Tiruvali, revealing to Vedic seers the source of all thoughts and residing in the hearts of others as the first-cause! O Vedic Lord, mischief Lord, my Lord! My heart worships you with the chant of your thousand names, and surrenders to you. Pray reveal yourself through words and their meaning.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்