விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மின்னின் மன்னும் நுடங்கு இடை*  மடவார்தம் சிந்தை மறந்துவந்து*
  நின்மன்னு சேவடிக்கே*  மறவாமை வைத்தாயால்*
  புன்னை மன்னு செருந்தி*  வண் பொழில் வாய் அகன்பணைகள் கலந்து*
  எங்கும் அன்னம் மன்னும் வயல்*  அணி ஆலி அம்மானே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

புன்னை செருந்தின்னு வண் பொழில் வாய் - புன்னை மரங்களும் சுரபுன்னை மரங்களும் பொருந்திருயிருக்கிற அழகிய சோலைகளிலே
அகன் பனைகள் எங்கும் - விசாலமான தடாகங்களிலெங்கும்
அன்னம் கலந்து மன்னும் - அன்னப்பற்றவைகள் சேர்ந்து வாழப்பெற்றதாயும்
வயல் - வயல்தளையடைத்தாயுமிருக்கிற
அணி ஆலி அம்மானே- அழகிய திருவாலிநகரிக்கு இறைவனே!;

விளக்க உரை

ஆழ்வார்தம்முடைய பழைய நிலைமையையும் இப்போதைய நிலைமையையும் நினைந்து எம்பெருமானிடத்திலே பெருநன்றி பாராட்டுகின்றார். பிரானே! அநாதி காலமாக நான் எப்படி யிருந்தவன்; மாதரிகளின் இடையழகிலே மயங்கிக் கிடந்தவனான்றே; அப்படிப்பட்ட என்னை அவ்விஷயத்தைக் காறியுமிழ்ந்து உன் திருவடிகளையே சிக்கெனப் பிடித்துக்கொண்டு வாழுமாறு பண்ணிவைத்தாயே!, இந்த மஹோபகாரத்தை நான் மறக்கலாகுமோ? என்கிறார். மூன்றாமடியில், பவண-‘பண்ணை’ என்பதன் தொகுத்தல்; குளம்.

English Translation

O, Lord of beautiful Tiruvali! Swans fill the lakes in the groves where Punnai and Serundi trees grow in profusion. You weaned me away from thoughts of lightning-thin-waist dames and made me hold on to your lotus feet without ever forgetting, what a wonder!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்