விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பொரு இல் வலம் புரி அரக்கன் முடிகள் பத்தும்*  புற்று மறிந்தன போலப் புவிமேல் சிந்த* 
  செருவில் வலம் புரி சிலைக் கை மலைத் தோள் வேந்தன்*  திருவடி சேர்ந்து உய்கிற்பீர்*
  திரை நீர்த் தெள்கி மருவி வலம்புரி கைதைக் கழி ஊடு ஆடி*  வயல் நண்ணி மழை தரு நீர் தவழ் கால் மன்னி* 
  தெருவில் வலம்புரி தரளம் ஈனும்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.         

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மழை தருநீர்தவழ் கால் - மழைநீர்வெள்ளம் பெருகி வருகிற வாய்க்கால்கள் மூலமாக
தெருவில் மன்னி - வீதிகளிலே வந்து சேர்ந்து
வலம்புரி தரளம் ஈனும் - சங்குகளையும் முத்துக்களையும்  (தெருக்களிலே) பிரஸவிக்கப்பெற்ற

விளக்க உரை

முன்னடிகளிலுள்ள வலம்புரி யென்ற சொற்களில், வலம் என்ற வடசொல் விகாரம் - புற்றுமறிந்தனபோல - புற்றுக்களைச் சிதைப்பது எப்படி எளிதான காரியமோ அப்படி எளிதாகவே அரக்கன் முடிகள் பத்தையும் சிதைத்தமையைச் சொன்னபடி திரை நீத்து இத்யாதி - கடலிலே வாழ்ந்து கொண்டிருந்த சங்குகளானவை இத்தலத்தின் நீர்வளத்தைப் பார்த்துக் கடலில் வாஸத்தை இகழ்ந்து விட்டிட்டு இத்தலத்தில் தாழைகள் மலிந்த கழிகளிலே வந்து சேர்ந்து, பிறகு, வயல்களிலே சென்று பாய்கின்ற அக்கழிகள் மூலமாக வயல்களிலே வந்து சேர்ந்து, அவ்விடத்தில் மiர்நீர்தேங்கி நின்று அது வாய்க்காலாலே ஊரிலே வந்து புகுர அவ்வழியாலே தெருக்களிலே வந்தேறி, அந்நீர்வழந்தவாறே பின்னைப் போகமாட்டாதே அவ்விடந்தன்னிலே கிடந்து சங்குகளையும் முத்துக்களையும் ப்ரஸவிக்கின்றனவாம். இத்தால் நீர்வள நிலவளங்கள் சொல்லப்பட்டன.

English Translation

Head after head of the demon did role like white-ant-hill-canker in the Warfield, Hit by the arrows of strong-arm Rama. Those who would join His feet go to the Kali, waters from ocean deep rise high in the sky, fall as rain, flow into rivulets and tanks, Then go through fertile fields fenced by screw pine: Seerama Vinnagar, O People, go to!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்