விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தெவ் ஆய மற மன்னர் குருதி கொண்டு*  திருக் குலத்தில் இறந்தோர்க்குத் திருத்திசெய்து* 
  வெவ் வாய மா கீண்டு வேழம் அட்ட*  விண்ணவர் கோன் தாள் அணைவீர்*
  விகிர்த மாதர் அவ் ஆய வாள் நெடுங் கண் குவளை காட்ட*  அரவிந்தம் முகம் காட்ட அருகே ஆம்பல்* 
  செவ் வாயின் திரள் காட்டும் வயல் சூழ்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நெடுங் கண் காட்ட - கருநெய்தற் பூக்களானவை விலகூணைகளான ஸ்திரிகளுடைய அப்படிப்பட்ட அழகிய நீண்ட கண்கள்  போன்று விளங்கவும்
அரவிந்தம் முகம் காட்ட - தாமரை மலர்களானவை (அவர்களது முகம் போன்று விளங்கவும் )
அருகே ஆம்பல் செம் வாயின் திரள் காட்டும் - அருகிலுள்ள செவ்வல்லி மலர்களானவை (அவர்களது  சிவந்த வாய்களின் கூட்டம் போன்று விளங்கவும் பெற்ற
வயல் சூழ் - கழனிகளால் சூழப்பட்ட நெல்

விளக்க உரை

பகை-பகைவர் , திருத்தி - த்ருப்தி என்னும் வடசொல்லின் விகாரம் - தர்ப்பணத்தைச் சொன்னபடி விகிர்தமாதர் இத்யாதி - விகிர்தம் - வடசொல், “ வேறுபாடுடைய “ என்று பொருள் மற்றெல்லாரும் போலன்றியே வைலக்ஷண்யம் பொருந்தியமாதர் என்ற படி, அவர்கள், குவளை போன்ற கண்ணழகும் கமலம் போன்ற முகவழகும் செவ்வாம்பல் போன்ற வாயழகுமுடையாய் இத்தலத்தில் வாழ்கின்றாரென்றவாறு

English Translation

Destroying twenty one mighty kings with axe he performed mane worship through their spilled blood. When the horse-demon Kesin charging came on, he tore the jaws apart, --Lord of gods, he. In the fields of Kali where water tanks abound, red lotus shows the face of different women, Blue lotus shows their eyes red lily their lips, Seerama Vinnagar, O People, go to!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்