விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஒரு குறள் ஆய் இரு நிலம் மூவடி மண் வேண்டி*  உலகு அனைத்தும் ஈர் அடியால் ஒடுக்கி*
  ஒன்றும் தருக எனா மாவலியைச் சிறையில் வைத்த*  தாடாளன் தாள் அணைவீர்*
  தக்க கீர்த்தி அரு மறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும்*  அங்கங்கள் அவை ஆறும் இசைகள் ஏழும்* 
  தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழிச்*  சீராமவிண்ணகரே சேர்மின் நீரே. (2) 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தெருவில் மலி விழா வளமும் - வீதி நிறைந்த உத்ஸவவைபவங்களும் (ஆகிய இவற்றாலே
சிறக்கும் - சிறப்புப் பெற்ற
காழி - காழியென்னும் க்ஷேத்திரத்திலுள்ள
சீராம விண்ணகரி - சீராம விண்ணகரமென்னும் திருப்பதியை
நீர்சேர்மின் - நீங்கள் சென்று சேருங்கள்

விளக்க உரை

இப்பாட்டில் ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு ஏழு என்னும் எண்கள் அழகாக அமைந்திருத்தல் நோக்கத்தக்கது. இத்திருப்பதியிலெ ழுந்தருளியிருக்கிற பெருமான் (மூல மூர்த்தி) உலகளந்த பெருமாளாதலால் ஒரு குறளா யென்று தொடங்குகிறார் இரண்டாமடியில் எண்ணா என்கிற செய்யாவென்னும் வாய்ப்பாட்டிறந்த காலவினையெச்சம் எனா என்று தொக்கியிருக்கிறது என்று சொல்லி என்பது பொருள் - தாடாளன் - பெருமை பொருந்தியவன், முயற்சியுள்ளவன், இத்தலம் தாடாளன் ஸந்நிதி என வழங்கப்படுதலுமுண்டு.

English Translation

One day this two-foot tall manikin came and asking for three steps he measured the whole Earth. For the third step He gave Mahabali king rule of the nether world benevolently. With the sound of Vedas-four, Sacrifice-five, six Angas, seven Svaras he resides in streets filled with gaity in festive Kali- Seerama Vinnagar, O people, go to!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்