விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  எய்யச் சிதைந்தது இலங்கை மலங்க*  வரு மழை காப்பான்* 
  உய்யப் பரு வரை தாங்கி*  ஆநிரை காத்தான் என்று ஏத்தி*
  வையத்து எவரும் வணங்க*  அணங்கு எழு மா மலை போல* 
  தெய்வப் புள் ஏறி வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே .(2)  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

உய்ய - (ஆநிரைகள்) பிழைப்பதற்காகவும்
பருவரை தாங்கி காத்தான் - பெரிய கோவர்த்தன மலையைக் (குடையாக) எடுத்துப் பிடித்து எல்லாரையும் காப்பாற்றினான்.
என்று வையத்து எவரும் ஏத்தி வணங்க - என்று சொல்லி பூமியிலுள்ளாரெல்லாரும் துதித்துத் தொழும் படியாக
அணங்கு எழுமா மலைபோலே தெய்வம் புள் ஏறி வருவான் - தெய்வாவேசங் கொண்ட ஒரு பெரிய மலைபோலே யிருக்கிற திவ்ய பக்ஷியாகியகருடன் மீதேறிக் கொண்டு எழுந்தருளும் பெருமான்

விளக்க உரை

மூன்றாமடியில் “வையத்தெவரும்” என்பதே பாடம். அரும்பதவுரைகாரர் “வையத்தேவரும்” என்று பாடங்கொண்டு நிலத்தேவர்களான பிராமணர்களென்று பொருளுரைத்து பெரியவாச்சான் பிள்ளை திருவுள்ளத்திற்குப் பொருந்தாது ஓசையின்பமும் சிதையும். அணங்கெழுமாமலைபோலே - அணங்கெழுதலாவது தெய்வாவேசம் பெறுதல். “காய்சினப் பறவையூர்ந்து பொன்மலையின் மீமிசைக் கார்முகில்” போல் 3573. என்றார்போலே பொன் போல் மேனியனான கருடன் மீது கரிய திருமால் வீற்றிருப்பது பொன்மலையினுச்சியில் காளமேகம் படிந்தாற் போன்றிருத்தலால் ” மாமலைபோலே தெய்வப்புள் ” என்றார்.

English Translation

The mountain-like Lord goes about on the Earth riding his Garuda-bird, worshipped by all. He rained arrows on Lanka, he lifted a mountain to stop the rains and protect the cows. He resides in Tillai Tiruchitrakudam.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்