விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பண்டு இவன் வெண்ணெய் உண்டான் என்று*  ஆய்ச்சியர் கூடி இழிப்ப* 
  எண் திசையோரும் வணங்க*  இணை மருது ஊடு நடந்திட்டு*
  அண்டரும் வானத்தவரும்*  ஆயிரம் நாமங்களோடு* 
  திண் திறல் பாட வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

இணை மருதூடு நடந்திட்டு - இரட்டை மருதமரத்தினிடையே நடை பயின்றவனாயும்
அண்டரும் வானத்தவரும் ஆயிரம் நாமங்களோடு - இடையர்களும் தேவர்களும் ஸஹஸ்ரநாமங்களைச் சொல்லி
திண் திறல் பாட வருவான் - த்ருடமான ஆண் பிள்ளைத் தனத் தைப் பாடும்படி (திருவாய்ப்பாடியில்)  ஸஞ்சரித்தவனாயுமுள்ள பெருமான்

விளக்க உரை

சிலர் எளிமைக் குணத்திலே யீடுபட்டிருப்பார்கள். சிலர் மேன்மைக் குணத்திலே யீடு பட்ழருப்பர்களென்றுண்டே; அதன் படியே கண்ணபிரான் திருவாய்ப்பாடியில் வெண்ணெய் முதலியவற்றைக் களவாடி யமுது செய்த எளிமைக்குணத்திலே நெஞ்சிழிந்தவர்கள். ” அறியாதார்க்கு ஆனாயனாகிப்போய் ஆய்ப்பாடி, ஹியார்நறுவெண்ணெ யஜண்டுகந்தான் காணேடீ ” 1995. என்றார்போலே ஏசிப்பேசிப் போதுபோக்குவர்கள் ; மேன்மைக்குணத்திலீடுபட்டவர்கள் ” கானமருங் கல்லதர் போய்க் காடுறைந்த பொன்னடிக்கள், வானவர்தஞ்சென்னி மலர்கண்டாய் சாழலே, ” 1992, என்றாற்போலே பேசி வணங்கிக் கிடப்பார்கள். ஆகவிப்படி ஏசுகைக்கும் ஏத்துகைக்கும் உரிய எளிமை மேன்மைகள் விளங்க நின்ற பெருமான் அக்குணங்களிரண்டும் குன்றாமே ஸேவை ஸாதிக்குமிடம் சித்ரகூடம் என்றாராயிற்று.

English Translation

The cowherd dames gathered and complained that he ate their butter. The eight Quarters bowed in worship when he went between the Marudu trees and destroyed them. Gods and men praised his strength with the chant-of-the-thousand-names. He resides in Tillai Tiruchitrakudam.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்