விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  காயோடு நீடு கனி உண்டு வீசு*  கடுங் கால் நுகர்ந்து நெடுங் காலம்*
  ஐந்து தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா*  திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்*
  வாய் ஓது வேதம் மலிகின்ற தொல்சீர்*  மறையாளர் நாளும் முறையால் வளர்த்த* 
  தீ ஓங்க ஓங்கப் புகழ் ஓங்கு*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்றுசேர்மின்களே.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வாய் ஓது வேதம் மலிகின்ற - வாயாலே ஓதப்பட்டு வருகிற வேதங்கள் குறைவற்றிருக்கிற
தொல்சீர்மறையாளர் நாளும் முறையால் வளர்த்த - இயற்கையான நற்குணங்களமைந்த  வைதிகரிகள் நாள்தோறும் கிரமமாக அநுஷ்டித்த
தீ ஓங்க ஓங்க புகழ் ஓங்கு - அந்நிகார்யங்கள் வளர வளர, (அதனாலே) கீர்த்தி வளரப் பெற்ற

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் ‘உயிர்காவலிட்டு” என்றதை விவரிக்கிறார் “காயோடு நீடு கனியுண்டு வீசு கடுங்கால் நுகரிந்து” என்று; இளம்பிஞ்சுகளைத் தின்றும் வெய்யிலிலும் காற்றிலுமுலர்ந்து பசையற்ற பழங்களைப் புசித்தும் வீசுகின்ற வெட்டிய காற்றைப் பருகியும் பஞ்சாக்நிமத்யத்தில் நின்று கொண்டு தவஞ்செய்தலாகிற வீண்தொழிலை விட்டிட்டுத் தில்லைத் திருச்சித்ர கூடஞ்சென்று சேர்மின்களென்கிறார். பிள்ளைப் பெருமாளையங்கார் இப்பாசுரத்தைத் திருவுள்ளம்பற்றித் திருவரங்கக் கலம்பகத்தில் “காயிலை தின்றுங்கானிலுறைந்துங் கதிதேடித், தீபிடைநின்றும் பூவலம் வந்துந் திரிவீர்காள், தாயிலுமன்பன் பூமகள் நண்பன் தடநாகப், பாயன் முகுந்தன் கோயிலரங்கம் பணிவீரே” என்றருளிய பாசுரம் நோக்கத்தக்கது.

English Translation

O people who wish to hold the Lord in your hearts! There is no need to live on fruit and vegetables, drink thin air, or stand between the five fires and do severe penance. Go and OFFER worship at Tillai Tiruchitrakudam where Vedic seers chant endlessly, and perform fire sacrifices every day, with ever-rising glory.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்