விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தூ வடிவின் பார்மகள் பூமங்கையோடு*  சுடர் ஆழி சங்கு இருபால் பொலிந்து தோன்ற* 
  காவடிவின் கற்பகமே போல நின்று*  கலந்தவர்கட்கு அருள்புரியும் கருத்தினானை* 
  சேவடி கை திருவாய் கண் சிவந்த ஆடை*  செம் பொன் செய் திரு உருவம் ஆனான் தன்னை
  தீ வடிவின் சிவன் அயனே போல்வார்*  மன்னு திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தூ வடிவின் - அழகிய வடிவையுடைய
பார்மகள் பூ மங்கையோடு - பூமிப்பிராட்டியோடும் பெரிய பிராட்டியோடும் கூடி
இருபால் - இரண்டு திருக்கைகளிலும்
சுடர் ஆழி சங்கு பொலிந்து தோன்ற - திருவாழி திருச்சங்குகள் பள பளவென்று விளங்க
காவடியின் கற்பகம் போல நின்று - சோலைசெய்திருக்கின்ற கற்பகம்போல நின்று

விளக்க உரை

காவடி விற்கற்பகம்=கப்பும் கிளையுமாகப் பணைத்துப் பெரிய சோலைபோலே பரந்து விளங்குகிற கல்பவ்ருக்ஷத்தை எம்பெருமானுக்கு உவமை கூறலாமேயன்றி வெறும் கல்பவ்ருக்ஷத்தை உவமை கூறலாகாதென்க. கா----சோலை. கல்பகம்----வேண்டுவார்வேண்டின வற்றையெல்லாம்; அளிப்பது என்று காரணப்பெயர்ஃ தீவடிவிற்சிவன் ® “ஓருருவம் பொண்ணுவருவம் ஒன்று செந்தி” என்பர் திருநெடுந் தாண்டகத்திலும்.

English Translation

A beautiful form with Dame Earth and lotus-dame Lakshmi resplendent with conch and discus on either side appears like a forest of Kalpaka trees, gracing the devotees with a benevolent heart, with red lotus feet, hands, lips and eyes, - even his robes are red, his jewels are of red gold, -his glorious form is worshipped by Siva, Brahma and the other gods. I have seen Him in the beautiful temple of Tirukkovalur.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்