விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மஞ்சு ஆடு வரை ஏழும் கடல்கள் ஏழும்*  வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம்* 
  எஞ்சாமல் வயிற்று அடக்கி ஆலின்மேல் ஓர்*  இளந் தளிரில் கண்வளர்ந்த ஈசன் தன்னை*
  துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால்*  தூய நான்மறையாளர் சோமுச் செய்ய* 
  செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும்*  திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.  (2)   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மஞ்சு ஆடு வரை ஏழும் - மேகங்கள் உலாவப்பெற்ற குலபர்வதங்கள் ஏழும்
கடல்கள் ஏழும் - ஸமுத்ரங்கள் ஏழும்
வானகமும் - ஸ்வர்க்கம் முதலிய மேலுலகங்களும்
மண்ணகமும் - மண்ணுலகமும்
மற்றும் எல்லாம் - மற்றுமுள்ள எல்லாப்பொருள்களும்

விளக்க உரை

ஸோமம் என்ற வடசொல் சோமு எனத் திரிந்தது. ஸோமலதையின்ரஸத்தைப் பருகுதலை அங்கமாகவுடையதும் மூன்று வருஷங்களால் ஸாதிக்கத்தக்கதுமாம் ஸோமயாகம். சாலி---- வடசொல்.

English Translation

The cloud-touching seven mountains and the seven oceans, the sky-world, the Earth-world and all else without harm, he held in his stomach and slept on a tender fig leaf. He is our Lord, for whom pure-hearted Vedic seers offer soma-sacrifice, in the midst of fields of golden paddy, on the southern banks of the ever-flowing waters of Pennai river, I have seen him in the beautiful temple of Tirukkovalur.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்