விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  உரம் தரு மெல் அணைப் பள்ளி கொண்டான்*  ஒருகால் முன்னம் மா உருவாய்க் கடலுள்* 
  வரம் தரு மா மணிவண்ணன் இடம்*  மணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி* 
  நிரந்தவர் மண்ணையில் புண் நுகர் வேல்*  நெடு வாயில் உக செருவில் முன நாள்* 
  பரந்தவன் பல்லவர்கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம் அதுவே.   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

முனம் ஒருகால் - முன்பொருகால்
மா உரு ஆய் - விலக்ஷணமான வடிவுடையனாய்
கடலுள் - திருப்பாற்கடலிலே
உரம் தரு மெல் அணை - வலிமிக்க மிருதுவான சேஷசயனத்திலே
பள்ளி கொண்டான் - திருக்கண்வளர்ந்தவனும்

விளக்க உரை

திருப்பாற்கடலிலே திருவனந்தாழ்வான்மீது சயனித் தருள்பவனும் திருலத்திமாலையில் பேரருளாளப் பெருமாளாய் வரதராஜன் என்று திருநாமம்புண்டு ஸேவை ஸாகிப்பவனுமான எம்பெருமானே பரமேச்சுரவிண்ணகரத்தில் ஸ்ரீகைகுண்ட நாதனாகக் காட்சி தந்தருள்கிறானென்கிறார்;. மண்ணையிலிருந்த சத்துருக்கள் இவ்வரசனது வேற்படையின் வாயிலே மாண்டொழிந்தனராம். உக---உகுதலாவது பொடியாய்ப் போதல்.

English Translation

Then in the yore, the lord displayed his huge form reclining on a serpent couch in the deep ocean, fulfilling the desires of his devotees. The dark gem Lord resides in the mansioned city of Kanchi. The good Pallava king who waged many wars and sent the enemies down the narrow neck of his spear comes to offer worship in the temple of Paramecchura Vinnagaram.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்