விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சொல்லுவன் சொல்பொருள் தான்அவைஆய்*  சுவை ஊறு ஒலி நாற்றமும் தோற்றமும்ஆய்* 
  நல்அரன் நாரணன் நான்முகனுக்கு இடம்தான்*  தடம் சூழ்ந்து அழகுஆயகச்சி*
  பல்லவன் வில்லவன் என்று உலகில்*  பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல் பல்லவன்*
  மல்லையர் கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம் அதுவே. (2)     

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வணங்கு கழல் - வணங்கப்பட்ட பாதத்தையுடையவனும்
மல்லையர்கோன் - மல்லாபுரியென்கிற திருக்கடல் மல்லையிலுள்ளார்க்குத் தலைவனுமான
பல்லவன் - பல்லவராஜன்
பணிந்த -கைகங்கரியம் செய்யப்பெற்ற
பரமேச்சுர விண்ணகரம் அது - பரமேச்வர விண்ணகரமென்கிற திவ்ய தேசமாம்

விளக்க உரை

உலகத்திலுள்ள ஸகல ஸாநாந்ய சப்தங்களாலும் விசேஷசப்தமாகிய வேதங்களாலும் பிரதிபாதிக்கப்படுபவனும், ஞானேந்திரியங்கள் ஐந்தாலும் அநுபவிக்கக்கூடியவனும்,படைத்தல் காத்தல் அழித்தலென்னும் முத்தொழில்களையும் முன்றுருக்கொண்டு நிர்வஹிக்குமவனுமான எம்பெருமான் கச்சித்திருப்பதியிலே பல்லவராஜனுடைய கைங்கரியங்களுக்குக் கொள்கலமான பரமேச்சுர விண்ணகரத்திலே எழுந்தருளியுள்ளான்----என்றாராயிற்று. சொல்லு என்றவிடத்து, உசுரம்-சாரியை; சொல் என்றபடி: சொல்லாவது உலகத்தில் வழங்கப்படும் சப்தராசிகள். கல் மண் முதலிய சொற்களெல்லாம் அவ்வப்பொருள்களுள் அந்தராத்மாவாய் உறைபவனான எம்பெருமானளவும் சொல்லிநிற்குமென்பது வேதாந்திகளின் கொள்கை. இது, வடமொழியில் அபர்யவஸாநவ்ருத்தி எனப்படும். இனி வன்சொல்லாவது என்றுமழியாமல் வலிதாயிருக்கக்கூடிய சப்தம்: அதுதான் வேதம்.

English Translation

The Lord is the Vedas, their substances, and their rules. He is the senses of taste, touch, sound, smell, and sight, and their controller. He is Brahma, Siva and the good Narayana, residing in Kanchi surrounded by lotus tanks. The Mallaiyar king Pallavan, - whom the world praises as “Pallava the great”, The great bow wielder”, and to whom other kings come and offer homage, -offers worship here in the temple of Paramecchura Vinnagaram.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்