விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மன்னவன் தொண்டையர் கோன்வணங்கும்*  நீள்முடி மாலை வயிரமேகன்* 
  தன்வலி தன்புகழ் சூழ்ந்தகச்சி*  அட்ட புயகரத்து ஆதிதன்னை* 
  கன்னிநல் மாமதிள் மங்கைவேந்தன்*  காமருசீர்க் கலிகன்றி*
  குன்றா இன்இசையால்சொன்ன செஞ்சொல்மாலை*  ஏத்தவல்லார்க்கு இடம் வைகுந்தமே. (2) 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தொண்டையர்கோன் - தொண்டை மண்டலத்திலுள்ளவர்கட்குத் தலைவனான
மன்னவன் - அரசனாலே
வணங்கும் - வணங்கப்பட்ட
நீள்முடி மாலை - நீண்ட திருவபிக்ஷேகத்தையுடைய ஸர்வேச்வரனாயும்,
வயிரமேகன் தன் வலி - வயிரமேகனென்னும் பிரபுவின் பராக்கிரமும் கீர்த்தியும் மலிந்த

விளக்க உரை

முற்காலத்தில் பலபல அரசர்கள் பல திவ்யதேசங்களை அபிமானித்து ஸநிநிதி ஜீர்ணோத்தாரணம் முதலிய சிறப்புகளைச் செய்துவந்தார்கள்; இத்திருவட்டபுகரத்தை வயிரமேக னென்னும் ஒரு தொண்டைநாட்டரசன் அபிமாநித்திருந்தமையால் அதனை யருளிச்செய்கிறார் முன்னடிகளில்.

English Translation

The Tondaman king Vairamegan came to offer worship for the Lord an Attabuyakaram in Kanchi, where the king’s name is known everywhere. This garland of the sweet Tamil songs is by Kalikanri, king of the high-walled Mangai tract. Those who can sing it will find a place in Vaikunta.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்