விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  முழுசிவண்டுஆடிய தண்துழாயின்*  மொய்ம்மலர்க் கண்ணியும், மேனிஅம்*
  சாந்துஇழுசிய கோலம் இருந்தவாறும்*  எங்ஙனம் சொல்லுகேன்! ஓவிநல்லார்* 
  எழுதிய தாமரை அன்னகண்ணும்*  ஏந்துஎழில்ஆகமும் தோளும்வாயும்* 
  அழகியதாம் இவர்ஆர்கொல் என்ன*  அட்டபுயகரத்தேன் என்றாரே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மேனி அம் சாந்து இழுசிய கோலம் இருந்த ஆறும் - திருமேனியிலே அழகிய சந்தனம் பூசப்பெற்ற அலங்கார மிருக்கும்படியையும்
எங்ஙனம் சொல்லுகேன் - என்னவென்று சொல்லுவேன்;
ஒவி நல்லார் எழுதிய - சித்ரமெழுதுவதில் வல்லவர்கள் எழுதினவை யென்னலாம் படியுள்ள
தாமரை அன்ன கண்ணும் - தாமரை யிதழ்போன்ற திருக்கண்களும்
ஏந்து எழில் ஆகமும் - மிக்க அழகையுடையய திருமார்வும்

விளக்க உரை

தேனொழுகுகின்ற திருத்துழாழ்மாலையைச் சாத்திக் கொண்டிருந்த அழகும் சந்தனக்காப்பு சாத்திக்கொண்டிருந்த அழகும்; என்ன சொல்லுவேன்!; அன்றியும், திருக்கண்களும் திருமார்பும் திருத்தோள்களும் திருப்பவளமும் சித்திரமெழுதவல்லவர்களால் எழுதப்பட்டவைபோன்று எவ்வகைக் குறையும் கூறவொண்ணாதபடி அழகு விஞ்சியிருந்தன; இப்படிப்பட்ட மஹாநுபாவர் யார்? என்றேன்; நான் தான் அட்டபுயகரத்தேன் என்றார்--என்கிறாள். (மேனி அஞ்சாந்து இழுசிய கோலம்.) முன்பு க்ருஷ்ணாவதாரத்தில் கூனியிடம் இரந்துபெற்ற அழகிய சந்தனத்தைப் பூசிக்கொண்டு பொலிந்த அழகை ஏட்டிலே கேட்டிருந்தோம்; இன்று நேரே காணப்பெற்றோம் என்கிறாள் போலும். ஓவிநல்லார் = சித்திரமெழுதுபவர்கட்கு ‘ஓவியர்’ என்று பெயர்; நல் ஓவியர் என்க. “ஓவினல்லார்” எனப்பாடங்கொண்டு, ‘ஓவில் நல்லார்’ என்று பிரித்து, ஓவில்--சித்திரமெழுதுவதில், நல்லார்--சிறந்தவர்கள் என்றுபொருள் கொள்வாருமுளர். “ஓவிநல்லாரெழுதிய” என்ற அடைமொழியைத் தாமரையிலே அந்வயித்து, சித்திரக்காரரால் எழுதப்பட்ட தாமரை யாதொன்றுண்டு, அதுபோன்ற திருக்கண்கள் என்றுரைப்பாருமுண்டு.

English Translation

Bees hovering on his cool Tulasi garland, Sandal paste smeared on his face, - O How can I describe this?, - like a painted picture of the lotus, his two eyes, his chest, his arms, and his mouth, were all very beautiful. Who could this be, I wondered. “I am the lord of Attabuyakaram!” he said.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்