விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வெம்திறல் வீரரில் வீரர்ஒப்பார்*  வேதம் உரைத்து இமையோர் வணங்கும்* 
  செந்தமிழ் பாடுவார் தாம்வணங்கும்* தேவர் இவர்கொல் தெரிக்கமாட்டேன்* 
  வந்து குறள்உருவாய் நிமிர்ந்து*  மாவலி வேள்வியில் மண்அளந்த* 
  அந்தணர் போன்றிவர் ஆர்கொல்? என்ன*  அட்ட புயகரத்தேன்என்றாரே.   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

செம் தமிழ் பாடுவார் தாம் வணங்கும் தேவர்கொல் - அழகிய தமிழ்ப் பாசுரங்களைப் பாடின முதலாழ்வார்கள் வணங்கப் பெற்ற திருவேங்கடமுடையானோ?
தெரிக்க மாட்டேன் - அறிகின்றிலேன்;
மாவலி வேள்வியில் - மஹாபலியின் யாகபூமியிலே
குறள் உரு ஆய் வந்து - வாமநவுருக் கொண்டுவந்து

விளக்க உரை

'வேதமுரைத்திமையோர் வணங்கும்” என்ற விசேஷணத்தைச் செந்தமிழ் பாடுவார்க்கு இயைக்கலாமென்பர் சிலர்.

English Translation

Valliant among the valiant warriors, worshipped by the Vedic seers, worshipped by the singers of pure Taxnil poems, I could not guess who this was. He looked like the Vedic lad who came as a manikin in Maballi’s sacrifice and grew to take the Earth. Who could this be, I wondered,” I am the Lord of Attabuyakaram!” he said.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்