விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  உளம்கனிந்துஇருக்கும் உன்னையே பிதற்றும்*  உனக்குஅன்றி எனக்கு அன்புஒன்றுஇலளால்* 
  'வளங்கனிப் பொழில்சூழ் மாலிருஞ் சோலை*  மாயனே! 'என்று வாய்வெருவும்* 
  களங் கனி முறுவல் காரிகை பெரிது*  கவலையோடு அவலம்சேர்ந்திருந்த* 
  இளங்கனி இவளுக்கு என் நினைந்துஇருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

உளம் கனிந்திருக்கும் - நெஞ்சு கனிந்திருக்கின்றாள்;
உன்னையே பிதற்றும் - உன்னைப்பற்றியே வாய் பிதற்றுநின்றாள்;
உனக்கு அன்றி - உன்விசயத்தில் தவிர
எனக்கு - என்விசயத்தில்
அன்பு ஒன்று இலள - அன்பு சிறிதும் உடையளல்லள்;

விளக்க உரை

(களங்கனிமுறுவல்.) களங்கனி வாய்க்கு இனிப்பாயிருப்பதுபோல் முறவல் காட்சிக்கு இனிதாயிருப்பதால் முறவலுக்குக் களங்கனியை உவமைகூறினரென்க. ஆகவே இது பயனுவமையாம்: (பயனைப் பற்றிவரும் உவமை-பயனுவமை.) “மாரிவண்கை, கற்பகவள்ளல்” என்ற விடங்களிற்போல. பண்பும் தொழிலும் பயனு மென்றிவற்றுள், ஒன்றும் பலவும் பொருளொடு பொருள் புணர்த்து, ஒப்புமைதோன்றச் செப்புவது உவமை” (31.) என்றார் தண்டியலங்காரத்தும்: இங்கே, களங்கனியாலுண்டாகிறபயனும் முறவலாலுண்டாகிற பயனும் ஒத்திருத்தலால் (--இரண்டும் இனிப்பாயிருந்தலால்) இவ்வுவமை ஒக்குமென்க. (இளங்கனியிவளுக்கு.) ‘கன்னி’ என்பது கனி யென்று தொகுத்தல் விகாரம் பெற்றிருக்கின்றது: ‘கந்யா’ என்னும் வடசொல் கன்னியென விகாரப்படும்.

English Translation

Her heart is disturbed, speaking of you everywhere, she has given all to you and none to me. “O Lord of ripe orchards, wonder-Lord of Solai Hills, O My very own”, she prates on and on My fruit-like daughter has lips like the red melon, thinking madly she has become love Iorn. Now tell me what do you intend to do with her, Idavendai Endai, my Lord, O!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்