விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  'ஊழியின் பெரிதால் நாழிகை!' என்னும்*  'ஒண் சுடர் துயின்றதால்!' என்னும்* 
  'ஆழியும் புலம்பும்! அன்றிலும் உறங்கா*  தென்றலும் தீயினில் கொடிதுஆம்* 
  தோழிஓ! என்னும் 'துணை முலை அரக்கும்*  சொல்லுமின் என்செய்கேன்?' என்னும்* 
  ஏழைஎன் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஒண் சுடர் துயின்றது என்னும் - ' ஸூர்யன் செத்துப் போய் விட்டான்’ என்கிறாள்;
தோழி - ‘அடீ ஸகியே!’ (என்று தோழியை அழைத்து அவளிடம் என்ன சொல்லுகிறாளென்னில்;)
ஆழியும் புலம்பும் - ‘ஸமுத்ரமோ கோஷதட செய்யாநின்றது;
அன்றிலும் உறங்கா - அன்றிற்பறவையோ உறங்குகிறதில்லை;
தென்றலும் தீயினில் கொடிது ஆம் - தென் திசைக்காற்றோ நெருப்பைவிட தீக்ஷ்ணமாயிருக்கின்றது

விளக்க உரை

எம்பிரானே! உன்னைவிட்டுப் பிரிந்து ஒரு நொடிப்பொழுதும் போக்க முடியவில்லை; இவ்விருள் தருமா ஞாலத்திலே என்னை வைத்திட்டு ஞானவொளி மழுங்கச் செய்திருக்கிறாய்; ஞானமென்னும் நிறைவிளக்கு அணைந்து போயிருக்கிறது; ஸம்ஸாரஸாகரம் கொந்தளிக்கின்றது; இவ்வுலகத்துப் பொருள்களெல்லாம் எனக்குப் பாதகமாயிராநின்றன; உன்னிடத்தில் நான் பக்க வைத்ததனாலன்றோ இப்பாடுபட நேர்கின்றது. அந்த பக்தியை அகற்றிவிட்டால் உண்டியே உடையே உகந்தோடு மிம்மண்டலத்தவர்களைப் போலே நானும் சுகமே வாழ்வேனன்றோ; ஆகையாலே பக்தியைத் தவிர்த்துக் கொள்ளலாமென்றும் எனக்குத் தோன்றுகின்றது; பாவியேன் திறத்தில் என்ன திருவுளமோ? சொல்லவேணும் - என்று ஆழ்வார் தாம் விண்ணப்பஞ் செய்தாராயிற்று. என்பொன்னுக்கு = ‘பொன்’ என்ற சொல்லால் மகளைக் குறித்தது அன்பின் மிகுதியாலாம்.

English Translation

Each hour stretches long, longer than aeon, alas even blessed Sun has gone to big sleep. The ocean does rend the heart, the Anril birdie’s call does hurt, the cool breeze is hotter than fire. “O Sakhis!”, she says, “My breasts are unbridled. Tell me what I should be doing now”. Now tell me what do you intend to do with her, Idavendai Endai, my Lord, O!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்