விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பிணங்கள் இடு காடு அதனுள்*  நடம் ஆடு பிஞ்ஞகனோடு* 
  இணங்கு திருச் சக்கரத்து*  எம் பெருமானார்க்கு இடம்*
  விசும்பில் கணங்கள் இயங்கும் மல்லைக்*  கடல்மல்லைத் தலசயனம்* 
  வணங்கும் மனத்தார் அவரை*  வணங்கு என்தன் மட நெஞ்சே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பிணங்கள் அடு காடு அதனுள் - பிணங்களைச் சுடுகிற சுடுகாட்டிலே
நடம் ஆடு - நடமாடுகின்ற
பிஞ்ஞகனோடு - ருத்ரனோடுகூட
இணங்கு - பொருந்தி யிருக்கிற
திரு சக்கரத்து எம்பெருமானார்க்கு இடம் - சக்ரபாணியான பெருமானுக்கு இடமானதும்

விளக்க உரை

எம்பெருமானுடைய ஸௌசீல்ய குணத்தை அநுபவிக்கிறார் முன்னடிகளில், தாமஸ தெய்வமான ருத்ரனுக்கும் தனது திருமேனியின் வலப்பக்கத்தில் இடங்கொடுத்து ஆதரிக்குமவனாம் எம் பெருமான். “ஏறாளுமிறையோனும் திசைமுகனுந் திருமகளும், கூறாளுந்தனியுடம்பன்” என்றும், “அக்கும்புலியின்களு முடையாரவரொருவர், பக்கம் நிற்க நின்ற பண்பர்” என்றும் ஆழ்வார்கள் அடிக்கடி அருளிச் செய்வர்கள். “பிணங்களிடுகாடு” “பிணங்களடுகாடு” என்பன பாடபேதங்கள். ச்மசான பூமியில் நடமாடுகிறவன் ருத்ரன். (பிஞ்ஞகன் என்று ருத்ரனுக்குப் பெயர்.) அவனோடு இணங்குதலாவது-அவனுக்கும் தனது திருமேனியிலே இடங்கொடுத்துப் பொருந்தவிட்டுக் கொள்ளுதல். “திருச்சக்கரத்தெம் பெருமானார்” என்றது - திருவாழியாழ்வான் முதலிய நித்யஸூரிகட்குத் தன் திருமேனியிலே இடம்; கொடுத்தருளியிருப்பதுபோலவே அஹங்காரியான ருத்ரனுக்கும் இடம்கொடுப்பவன் என்ற கருத்தை வெளிப்படுத்தும்.

English Translation

Our Lord with the discus resides along with the Pingala Lord Siva, who frequents the cremation ground, --in Kadal Mallai Talasayanam where the celestials in hordes offer worship Him there!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்