விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தொண்டு ஆயார் தாம்பரவும் அடியினானை*  படிகடந்த தாளாளற்கு ஆள்ஆய் உய்தல் விண்டானை*
  தென்இலங்கை அரக்கர்வேந்தை*  விலங்குஉண்ண வலங்கைவாய்ச் சரங்கள்ஆண்டு* 
  பண்டுஆய வேதங்கள் நான்கும்*  ஐந்து வேள்விகளும் கேள்வியோடு அங்கம்ஆறும் கண்டானைத்*
  தொண்டனேன் கண்டுகொண்டேன்*  கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

விலங்கு உண்ண - மிருகங்கள் தின்னும்படி
வலம் கைவாய் - வலத்திருக்கையாலே
சரங்கள் ஆண்டு - அம்புகளைப்பிரயோகித்தவனும்,
பண்டு ஆய - நித்யமான
நான்கு வேதங்களும் - நாலு வேதங்களையும்

விளக்க உரை

‘ஆயார்’ என்றது ஆனார் என்றபடி; தொண்டராக ஆனவர்கள்-“ஒழிவில் காலமெல்லா மூடனாய் மன்னி, வழுவிலா வடிமை செய்யவேண்டும் நாம்”; என்றிருப்பவர்கள்; அப்படிப்பட்டவர்களால் போற்றப்படும் திருவடிகளை யுடையவன்; நம் உடைமையை நாம் இழக்கலாகாது’ என்று தானே தன் திருவடிகளைக் கொண்டுவந்து எல்லார் தலையிலும் வைத்து ஸத்தை பெறுவித்த சிறந்த குணத்தில் ஈடுபட்டு ஆட்படாமல் மார்பு நெறித்திருந்த இராவணனுடைய உடலை நாயும் நரியும் கழுகும் முதலிய மிருகங்கள் தின்னும்படி அம்புகளைச் செலுத்தி முடித்தவன்; ஆத்துமாக்கள் தன்னைப் பணிந்து உய்ந்துபோவதற்காகப் பலவகைப்பட்ட சாஸ்த்ரங்களையும் அநுஷ்டாநங்களையும் ஏற்படுத்தினவன்; இப்படிப்பட்ட பெருமானை அடியேன் இன்று திருக்கடல் மல்லையிலே ஸேவிக்கப்பெற்றேன்.

English Translation

Devotees worship the Lord’s feet, the feet that strode the Earth. The Rakshasa Ravana, king of Lanka would never offer worship. The lord killed him with hot arrows. He is the substance of the four Vedas, the five sacrifices, the six Angas, and this devotee’s very own. Amid cool fragrant groves, I have seen Him in Talasayanam at Kadal Mallai.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்