விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கிடந்தானை தடங்கடலுள் பணங்கள்மேவி*  கிளர்பொறிய மறிதிரிய அதனின்பின்னே படர்ந்தானை*
  படுமதத்த களிற்றின் கொம்பு பறித்தானை*  பார்இடத்தை எயிறுகீற இடந்தானை*
  வளைமருப்பின் ஏனம்ஆகி*  இருநிலனும் பெருவிசும்பும் எய்தாவண்ணம் கடந்தானை*
  எம்மானைக் கண்டுகொண்டேன்*  கடிபொழில சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தடகடலுள் - விசாலமான திருப்பாற் கடலிலே
பணங்கள் மேவி - (திருவனந்தாழ்வானது) படங்களின் கீழே பொருந்தி
கிடந்தானை - பள்ளி கொள்பவனும்,
கிளர் பொறிய - கிளர்ந்த பலவகைப் புள்ளிகளையுடைய
மறி - (மாரிசனென்னும்) மாயாமிருகம்

விளக்க உரை

கிளர்பொறிய மறி = ‘மறி’ என்று மான்குட்டிக்குப் பெயர். (பிணை என்று பெண்மானுக்குப் பெயர்; “மறியொடு பிணைசேர் மாலிருஞ்சோலை” என்ற திருவாய்மொழியுங் காண்க.) மாரிசன் விசித்திரமான புள்ளிகளையுடைய மானாக வந்தமைபற்றிக் “கிளர் பொறிய” எனப்பட்டது. அதனின் பின்னே “படர்ந்தானை”என்றதில், மாரீசனைக் கொன்றொழித்த்தும் விவக்ஷிதம்.

English Translation

He reclines in the deep ocean, on a hooded serpent. He went after motely calves; He plucked the rut-elephant’s tusk. He came as a boar with crescent like tusks, and lifted the Earth on it. He grew beyond the sky and strode the Earth. Amid cool fragrant groves, I have seen Him in Talasayanam at Kadal Mallai.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்