விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டு*  பொய்ந் நூலை மெய்ந் நூல் என்று என்றும் ஓதி  மாண்டு*
  அவத்தம் போகாதே வம்மின்*  எந்தை என் வணங்கப்படுவானை*
  கணங்கள் ஏத்தும் நீண்ட வத்தை கரு முகிலை எம்மான் தன்னை* நின்றவூர் நித்திலத்தை தொத்துஆர்சோலைக்* 
  காண்டவத்தைக் கனல் எரிவாய்ப் பெய்வித்தானைக்*  கண்டது நான்-கடல்மல்லைத் தலசயனத்தே. (2)       

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பிறர்க்கு அடைந்து - பிறரை(நீசர்களை) ஆச்ரயித்து
தொண்டுபட்டு - (அவர்களுக்கு)அடிமை செய்தும்
பொய் நூலை - அபத்தங்களான பாஹ்யமதச்சுவடிகளை
மெய்நூல் என்று - யதார்த்தமான சாஸ்த்ரமாகக் கொண்டு
என்றும் - எப்போதும்

விளக்க உரை

தலசயனத்துறைவாரைத் தாம் ஸேவிக்கப் பெற்றதுபோல உலகிலுள்ளாரெல்லாரும் ஸேவிக்கப் பெறவேனுமென்கிற ஆசையினால், இங்கே ஸேவிக்க வாருங்களென்று மற்றும் பலரையும் அழைக்கிறார். வயிற்றுப் பிழைப்புக்காகப் பிறர்க்கு அடிமைப்பட்டுக் காலத்தைப் பாழாக்குவாரும், வேதபாஹ்யர்கள் வேதகுத்ருஷ்டிகள் என்று சொல்லப்படுகிற மதாந்தரஸ்களின் திரளிலே புகுந்து ஸ்வரூபநாசம் அடைவாரும் பலருண்டாகையாலே அவர்களையும் விடமாட்டாத காருண்யத்தினால் அவர்களையும் மங்களாசாஸநத்திற்கு ஆளாக்கிக் கொள்ளப் பாரிக்கிறார்.

English Translation

Do not waste your time going to others and becoming their slaves, learning false texts as great truth, then losing your life to them. Come, my lord is extolled by hordes, he is eternal, he is the cloud hued one, standing in Tiruninravur, who swallowed the forest fire that ravaged kandava vana. I have seen him in Talasayanam at Kadal Mallai.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்