விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தாங்காதது ஓர் ஆள் அரி ஆய்*  அவுணன் தனை வீட முனிந்து அவனால் அமரும்* 
  பூங் கோதையர் பொங்கு எரி மூழ்க விளைத்து அது அன்றியும்*  வென்றி கொள் வாள் அமரில்*
  பாங்கு ஆக முன் ஐவரொடு அன்பு அளவி*  பதிற்றைந்து இரட்டிப் படை வேந்தர் பட* 
  நீங்காச் செருவில் நிறை காத்தவனுக்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே.      

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தாங்காதது - எதிரிகளுக்கு ஸஹிக்கமுடியாத
ஓர் ஆளி அரி ஆய் - ஒப்பற்ற நரசிங்க மூர்த்தியாய்த் தோன்றி
அவுணன் தனை - (ஹிரண்யனென்னும்) அஸூரனை
வீட முனிந்து - முடியுமாறு சீறி,
அவனால் அமரும் - அவ்விரணியனால் நிலைபெற்றிருந்த

விளக்க உரை

நீங்காச்செருவில் நிறைகாத்தவனுக்கு என்றவிடத்து, “பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்துக், கந்தார் களிற்றுக் கழல் மனனர் கலங்கச் சங்கம்வாய்வைத்தான்” என்ற பாசுரமும், “அர்ஜூனநனுக்கு தூத்ய ஸாரத்யங்கள் பண்ணிற்றும் ப்ரபத்தியுபதேசம் பண்ணிற்றும் இவளுக்காக” என்ற ஸ்ரீவசநபூஷண ஸூக்தியும் அநுஸந்திக்கத்தக்கன.

English Translation

The Lord came as a terrible man-lion with Uncontrollable rage and killed the angry Hiranya, dispatching his flower-decked queens into the fire. Then in the victorious war, he befriended the five Pandavas, killed the mighty hundred and protected Draupadi’s fair name. Tirunirmalai is His great hill abode.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்