விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அன்று ஆயர் குலக் கொடியோடு*  அணி மாமலர் மங்கையொடு அன்பு அளவி*  
  அவுணர்க்கு என்றானும் இரக்கம் இலாதவனுக்கு*  உறையும் இடம் ஆவது*
  இரும் பொழில் சூழ் நன்று ஆய புனல் நறையூர் திருவாலி குடந்தை*  தடம் திகழ் கோவல்நகர்* 
  நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அன்று - கிருஷ்ணனாய்ப் பிறந்த அக்காலத்து
ஆயர்குலம் கொடியோடு - இடைக்குலத்திற் பிறந்தகொடி போன்ற நப்பின்னை பிராட்டியோடும்
அணி மா மலர் மங்கையொடு - மிகச் சிறந்த தாமரை மலரிற் பிறந்த பெரிய பிராட்டியோடும்
அன்பு அளவி - அன்புடன் கலந்தவனும்
என்றானும் - எக்காலத்திலும்

விளக்க உரை

மாமலையாவது நீர்மலையே என்ற சொல்தொடரிலுள்ள ‘ ஆவது ‘ என்பதை இடம் என்பதனோடே கூட்டி ‘இடமாவது மாமலை நீர்மலை” என்று உரைப்பர் சிலர்; அங்ஙனம் வேண்டா; உள்ளபடியே அந்வயித்து உரைத்தல் தகும். மாமலை ஆவது - மாமலையான என்றபடி. நீர்மலை = நீரானது அரண்போலச் சூழப்பெற்ற மலையானது பற்றித் திருநீர்மலை யெனப்படும்.

English Translation

The Lord, who is spouse of cowherd-dame Nappinnai and of lotus-dame Lakshmi, who is ever merciless against Asuras, is surrounded by groves in well watered Naraiyur where he stands, in Tiruvali where he sits, in Kudandai where he reclines, and in lake filled Tirukkovalur where he is strident. He is all in Tirunirmalai, his great hill abode.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்