விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும்*  மாட மாளிகையும் மண்டபமும்* 
  தென்னன் தொண்டையர்கோன் செய்த நல் மயிலைத்*  திருவல்லிக்கேணி நின்றானை*
  கன்னி நல் மாட மங்கையர் தலைவன்*  காமரு சீர்க் கலிகன்றி* 
  சொன்ன சொல்மாலை பத்து உடன் வல்லார்*  சுகம் இனிது ஆள்வர் வான்உலகே. (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மன்னு தண் பொழிலும் - நித்தியமாய் குளிர்ந்த சோலைகளும்
வாவியும் - நீர் நிலங்களும்
மதிளும் - மதில்களும்
மாடம் மாளிகையும் - மாட மாளிகைகளும்
மண்டபமும் -  மண்டபங்களும் உண்டாம்படி

விளக்க உரை

மலயத்வஜனென்கிற பாண்டிய ராஜனுக்குத் தென்னன் என்று பெயர்; “கொன்னவில் கூர்வேல்கோன் நெடுமாறன் தென்கூடல்கோன், தென்னன்” என்ற பெரியாழ்வார் திருமொழியும் காண்க. தொண்டைமான் சக்ரவர்த்தி அத்தென்னனுடைய வம்சத்தில் தோன்றினமைபற்றித் தென்னன் தொண்டையர்கோன் என்றருளிச் செய்யப்பட்ட்தென்று சொல்லக் கேட்டிருக்கை. அழகிற் சிறந்த மாதர்கள் வாழுமிடமாயிருந்தாலும் “ஒப்பவரில்லா மாதர்கள் வாழும் மாட மாமயிலை” என்று ஆழ்வார் தாமும் அருளிச் செய்திருக்கையாலும் மஹிளாபுரீ என்ற வடமொழியிலும் மயிலை என்று தென்மொழியிலும் வழங்கப்பட்டு வந்ததே மயிலாப்பூரென்பதாம். அதன் ஸமீபத்திலுள்ள காரணம்பற்றி மயிலைத் திருவல்லிக்கேணி எனப்பட்டது. மஹிளா என்ற வடசொல்-சிறந்த மாதர் என்று பொருள்படும் “மயூரபுரீ” என்றும் சிலர் வழங்குவர்.

English Translation

The Tondaman king laid out the Mayilai-Tiruvallikkeni city with lakes, gardens, mansions, garrison walls and Mandapas. This garland of poems by the handsome kalikanri, king of mansioned Mangai-tract, sings of the Lord residing in the temple of Tiruvallikkeni. Those who master it will enjoy life here and rule over heaven.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்