விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன்*  வாயில் ஓர் ஆயிரம் நாமம்* 
  ஒள்ளிய ஆகிப் போத ஆங்கு அதனுக்கு*  ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி* 
  பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப*  பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய்* 
  தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை*  திருவல்லிக்கேணிக் கண்டேனே. (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பள்ளியில் ஓதி வந்த - பள்ளிக்கூடத்தில் வாசித்து விட்டு வீட்டுக்கு வந்த
தன் சிறுவன் வாயில் - தனது மகனான ப்ரஹ்லாதனுடைய வாயில்
ஓர் ஆயிரம் நாமம் - விலக்ஷணமான ஸஹஸ்ர நாமங்கள்
ஒள்ளிய ஆகி போத - அழகாக உச்சரிக்கப்பட்டு வர
ஆங்கு - அக்காலத்திலே

விளக்க உரை

இப்பாட்டில் தெள்ளியசிங்கம் என்று ஆழ்வாரருளிச்செய்தது கொண்டே திருவல்லிக்கேணியி லெழுந்தருளியுள்ள அழகிய சிங்கப்பெருமாளுக்குத் தெளிசிங்கப்பெருமாள் என்று திருநாமம் வழங்கலாயிற்று; ‘துள சிங்கப்பெருமாள்’ என்று பலரும் வழங்குவது பிழையென றுணர்க. சீறிவெகுண்டு = ஒரு பொருட்பன் மொழி; மிகவும் கோபங்கொண்டு என்றபடியாம்.

English Translation

Hearing his son, - who returned from school, - recite the chant of thousand names beautifully, the Asura Hiranya lost his temper, and tortured the child, then kicked a pillar, when Lo! With fiery eyes and gaping mouth showing crescent-like teeth, a terrible man-lion sprang out and killed the Asura. I have seen him in Tiruvallikkeni.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்