விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கு இளையவன்*  அணி இழையைச் சென்று* 
  'எந்தமக்கு உரிமை செய்' என தரியாது*  'எம் பெருமான் அருள்!' என்ன*
  சந்தம் அல் குழலாள் அலக்கண் நூற்றுவர்தம்*  பெண்டிரும் எய்தி நூல் இழப்ப* 
  இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானை*  திருவல்லிக்கேணிக் கண்டேனே*           

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அந்தகன் சிறுவன் - குருடனான த்ருதராஷ்ட்ரனுடைய பிள்ளையாய்
அரசர் தம் அரசற்கு - ராஜாதி ராஜனென்று தன்னை மதித்திருந்த துரியோதனனுடைய
இளையவன் - தம்பியான துச்சாஸநன்
அணி இழையை சென்று - அழகிய ஆபரணங்களையுடையளான த்ரௌபதியிடம் வந்து
எம்தமக்கு உரிமை செய் என - “நீ எங்களுக்கு அடிமை செய்யக்கடவை” என்று சொல்ல,

விளக்க உரை

சந்தம் அல்குழலாள் =‘சந்தம்’ என்று அழகுக்குப் பெயர்; அல் என்று இருளுக்குப் பெயர்; அழகிய இருண்ட கூந்தலையுடைய த்ரௌபதி யென்க. அலக்கண்-மனவருத்தம். த்ரௌபதியின் வயிற்றெரிச்சலெல்லாம் சத்துரு பத்தினிகளுக்குப் போய்ச் சேருமாறு கண்ணபிரான் காரியஞ் செய்தனனென்று சமத்காரமாக அருளிச் செய்தபடி. அழுதவர்கள் சிரிக்கும்படியும், சிரித்தவர்கள் அழும்படியும் காரியஞ் செய்தானென்க.

English Translation

The blind king Dhritrashtra’s son, king of kings Duruyodhana, and his younger brother Dusshasana went to the beautiful jeweled Draupadi and said, “Serve me”, Unable to bear this, the dark tressed one prayed, “Lord, save me!”, when Lo! The lord took her grief and gave it to the others’ wives, making them lose their marriage thread. He drove Indra-born-Arjuna’s chariot. I have seen Him in Tiruvallikkeni.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்