விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும்*  வேழமும் பாகனும் வீழச்* 
  செற்றவன் தன்னை புரம் எரி செய்த*  சிவன் உறு துயர் களை தேவை* 
  பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு*  பார்த்தன்-தன் தேர்முன் நின்றானை* 
  சிற்றவை பணியால் முடி துறந்தானை*  திருவல்லிக்கேணிக் கண்டேனே* (2)   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பெரு வில் விழவும் - சிறந்ததான தநுர்யாகமென்கிற உத்ஸவமும்
கஞ்சனும் - (அந்த உத்ஸவத்தை நடத்தின) கம்ஸனும்
மல்லும் - (அந்த கம்ஸனாலே ஏவி நிறுத்தப்பட்ட) மல்லர்களும்
வேழமும்பாகனும் - (குவலயாபீடமென்கிற) யானையும் அதன் பாகனும் (ஆகிய எல்லாம்)
வீழ செற்றவன் தன்னை - பங்கமடையும்படி த்வம்ஸம் பண்ணினவனும்,

விளக்க உரை

இத்தலத்திலே ஸேவைஸாதிக்கின்ற எம்பெருமான் பார்ததஸாரதியாகையால், அப்பெருமானுடைய சிறுச்சேவகங்களைச் சொல்லியேத்துகிறார். விற்பெருவிழவு = கம்ஸன் தனது வில்லுக்குப் பெரிய பூஜை நடத்துவதாகச் செய்த மஹோத்ஸவம். வேழமும் பாகனும் மல்லர்களும் கஞ்சனும் மடியவே வில்விழவும் முடிந்ததாயிற்று. வீழ என்றது- நாசமடைய என்றபடி; உபசாரவழக்கு. கண்ணபிரானாகவும் இராமபிரானாகவும் திருவவதரித்து அக்காலத்து மஹான்களை வாழ்வித்தருளின எம்பெருமான், பிற்பட்டவர்களையும் வாழ்விக்கத் திருவல்லிக்கேணியிலே நித்ய ஸந்நிதி பண்ணியிருக்கிறபடியை அடியேன் ஸேவிக்கப்பெற்றே னென்றாராயிற்று.

English Translation

The great bow’s sacrifice, the mighty Kamsa, the wrestler, the rutted elephant and the mahout, were all destroyed by out lord who rid the three city-destroyer Siva of his curse. He came as the charioteer for Arjuna and destroyed the Kaurava foes; he gave up his kingdom on orders from his step-mother Kaikeyi. I have seen him in Tiruvallikkeni.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்