விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  உண்டாய் உறிமேல்*  நறு நெய் அமுது ஆக* 
  கொண்டாய் குறள் ஆய்*  நிலம் ஈர் அடியாலே* 
  விண் தோய் சிகரத்*  திருவேங்கடம் மேய, 
  அண்டா!*  அடியேனுக்கு அருள்புரியாயே.    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

உறி மேல் - உறிகளின் மேல் வைக்கப்பட்டிருந்த
நறு நெய் - நல்ல நெய்யை
அமுது ஆக உண்டாய் - அமுதமாகக் கொண்டு புஜித்தவனே!
குறள் ஆய் - வாமநனாகி
நிலம் - பூமியை

விளக்க உரை

திருமலையிலெழுந்தருளியிருக்கிற இருப்பில் பரத்வ ஸௌலப்யங்களிரண்டும் ஒருங்கே விளங்குகின்றன வென்னவேண்டி. இரண்டுக்கும் ப்ரகாசமான இரண்டு சேஷ்டிதங்களை முன்னடிகளிற் கூறுகின்றார். திருவாய்ப்பாடியில் ஆய்ச்சிகள் உறிகளின்மேலே சேமித்துவைத்த நெய் முதலிய கவ்யங்களை அமுது செய்தாயென்று சொன்னமுகத்தால் ஸௌலப்ய குணத்தையும், குறளாகி மாவலி யிடத்துச்சென்று நீரேற்றுப் பெற்று ஈரடியாலே உலகளந்தாயென்று சொன்னமுகத்தாலே பரத்வத்தையும் பேசினாராயிற்று.

English Translation

O Universe-Lord, Resident of Venkatam hills whose peaks pilerce the sky! You ate the fragrant butter from the rope shelf, your came as a manikin and took the Earth in two steps! Pray shower your grace on me, your servant.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்