விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  இலங்கைப் பதிக்கு*  அன்று இறை ஆய*
  அரக்கர் குலம் கெட்டு அவர் மாள*  கொடிப் புள் திரித்தாய்!* 
  விலங்கல் குடுமித்*  திருவேங்கடம் மேய*  
  அலங்கல் துளப முடியாய்!*  அருளாயே.     

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அன்று - முற்காலத்தில்
இலங்கை பதிக்கு - லங்காபுரிக்கு
இறை ஆய - அரசர்களாயிருந்த
அரக்கரவர் - (மாலிமுதலிய) ராக்ஷஸர்கள்
குலம்கெட்டு மாள - கும்பலோடே சிதறியோடி முடியும்படியாக

விளக்க உரை

புற்றானது என்றைக்கும் துஷ்ட ஸர்ப்பங்கள் மாறாதே உடையுமிடமாக இருப்பதுபோல இலங்கையானது இராவணனுக்கு முன்பும் குடியிருந்து வந்த மாலிமுதலானவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வந்ததாதலால் அவர்களையும் தொலைத்தபடி சொல்லுகிறது இப்பாட்டில். உத்தர ஸ்ரீராமாயணத்தில் ஏழாவது ஸர்க்கத்தில் மாலிமுதலிய அரக்கர்களை மடித்தவரலாறு விரிவாகக் கூறப்பட்டுள்ளது, கண்டுகொள்க. மாலியானவன் முதலில் பெரிய திருவடியை கதையாலே அடித்துத் துரத்திவிட்டானென்றும், பிறகு பெருமாள் அளவற்ற சீற்றங்கொண்டு அப்பெரிய திருவடியின் மேல் ஏறிக்கொண்டு போர்க்களத்திலே யெழுந்தருளித் திருவாழியைப் பிரயோகித்து வெற்றி பெற்றனன் என்றுமுணர்க. அலங்கல்துளபமுடியாய் அருளாய் = ஆர்த்தர்களை ரக்ஷிப்பதற்கென்றே தனிமாலையிட்டிருக்கிற உனக்கு என்னுடைய விரோதிகளைப் போக்குகை ஒரு பெரிய காரியமன்று; அருள்செய்ய வேண்டுமத்தனை யென்கை.

English Translation

O Lord wearing a beautiful Tulasi wreath! Resident of Venkatam hills whose peaks rise without a peer! You rode the Garuda bird to destroy the clannish Rakshasas who ruled the Lanka kingdom. Pray grace me.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்