விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  குலம் தான் எத்தனையும்*  பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன்* 
  நலம் தான் ஒன்றும் இலேன்*  நல்லது ஓர் அறம் செய்தும் இலேன்* 
  நிலம் தோய் நீள் முகில் சேர்*  நெறி ஆர் திருவேங்கடவா!* 
  அலந்தேன் வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நிலம் தோய் நீள் முகில் சேர் நெறி ஆர் திருவேங்கடவா - பூமியிலே படிந்த பெரிய மேகங்கள் நடமாடின வழிகள்  பொருந்தியிரு க்கிற திருமலையிலெழுந்தருளி யுள்ளவனே!
எத்தனை குலமும் - எல்லாக்குலங்களிலும்
பிறந்து இறந்து எய்த்து ஒழிந்தேன் - பிறப்பதும் இறப்பதுமாக இளைத்துப் போனவனும்
நலம் ஒன்றும் இலேன் - ஒருவகை நன்மையுமில்லாதவனும்
நல்லது ஓர் அறமும் செய்திலேன் - நல்ல தருமமொன்றும் செய்தறியாதவனும்

விளக்க உரை

English Translation

In how many families I have taken birth, and died, labouriously. I have no goodness, nothing good have I done so far. Dark clouds rub the ground; over the foot paths’. In the hill of Tiruvenkatam. Today I have come to you. Pray take me into your service!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்