விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு*
  பலகோடி நூறாயிரம்*
  மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!*   உன்
  செவ்வடி செவ்விதிருக் காப்பு (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மல் ஆண்ட - மல்லர்களை நிரஹித்த;
திண் தோள் - திண்ணிய தோள்களையுடையனாய்;
மணி வண்ணா - நீலமணிபோன்ற திருநிறைத்தை யுடையனானவனே;
பல் ஆண்டு பல் ஆண்டு - பலபல வருஷங்களிலும்;
பல் ஆயிரம் ஆண்டு - அநேக ப்ரஹ்ம கல்பங்களிலும்;

விளக்க உரை

பாண்டியராஜனுடைய பண்டித சபையிலே பரதத்வ நிர்ணயம் பண்ணின பெரியாழ்வாருக்கு யானையின் மேலே மகோத்சவம் செய்வித்த போது, எம்பெருமான் தானும் அதைக் கண்டு ஆனந்திப்பதற்க்காக, கருடாரூடனாக எழுந்தருளி சேவை சாதிக்க, ஆழ்வாரும் எம்பெருமானைக் கண்டு சேவித்து, “ஜய விஜயீ பவ” என்று சொல்லுமாப்போலே அசுர ராக்ஷஸ மயமாய் இருக்கும் இந்த நிலத்திலே எம்பெருமானுக்கு ஒரு அமங்கலமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று நினைத்து எம்பெருமானுக்கு பல்லாண்டு பாடுகிறார். எம்பெருமானும் தானும் ஐயோ! ஏன் நம்மைப் பார்த்து இப்படி பயப்படுகிறார் ஆழ்வார், எதிரிகளை ஒரு விரல் நுனியாலே வெல்லவல்ல தேஹவலிவு நமக்கு உண்டு என்பதை ஆழ்வார் அறிகிறார் இல்லை போலும்; அதைக் காட்டினால் இவருடைய அச்சம் துலைந்துவிடும் என்று நினைத்து, கம்சனால் ஏவப்பட்ட மல்லர்களைக் கொன்ற புஜபலத்தைக் காட்டினான் எம்பெருமான். இப்படி புஜபலத்தைக் காட்டினது ஆழ்வாரின் அச்சம் தணிவதற்காக ஆகும், ஆனால் ஆழ்வாருக்கோ மேலும் அச்சம் பெருகிப்போக, மல்லாண்ட திண்டோள் மணிவண்ணா என்று மீண்டும் பல்லாண்டு பாடுகிறார். இங்கே ஆழ்வாருக்கு ஏற்பட்ட அச்சம் எப்படியாபட்டது என்றால், ஒரு தாயானவள் தன் மகன் சூரனாய் இருப்பினும் அவன் யார் சொல்லியும் கேட்காமல் யுத்தம் செய்யப் போய்விடுவானே – யாராலே என்ன கெடுதி நேர்ந்துவிடுமோ என்று அஞ்சுவதைப் போன்று ஆகும் என்று பூருவர்கள் நமக்கு புரியும் படியாக அருளியது மிகவும் சிறப்பாகும்.

English Translation

Many years, many years, many thousands of years and many hundred thousands more. Gem-hued Lord with mighty wrestling shoulders, your red lotus feet are our refuge

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்