பிரபந்த தனியன்கள்

நாரா யணன்படைத்தான் நான்முகனை, நான்முகனுக்
கேரார் சிவன்பிறந்தான் என்னும்சொல் - சீரார்
மொழிசெப்பி வாழலாம் நெஞ்சமே, மொய்பூ
மழிசைப் பரனடியே வாழ்த்து

   பாசுரங்கள்


  விரைந்துஅடைமின் மேல் ஒருநாள்*  வெள்ளம் பரக்க* 
  கரந்துஉலகம்*  காத்து அளித்த கண்ணன் பரந்துஉலகம்*

  பாடின ஆடின கேட்டு*  படுநரகம் 
  வீடின வாசற் கதவு.    


  கதவு மனம் என்றும்*  காணலாம் என்றும்* 
  குதையும் வினைஆவி தீர்ந்தேன்*  விதைஆக

  நல்தமிழை வித்தி*  என் உள்ளத்தை நீவிளைத்தாய்* 
  கற்றமொழி ஆகிக் கலந்து.


  கலந்தான் என் உள்ளத்து*  காமவேள் தாதை* 
  நலம்தானும்*  ஈதுஒப்பது உண்டே*  அலர்ந்தலர்கள்

  இட்டுஏத்தும்*  ஈசனும் நான்முகனும்*  என்றிவர்கள் 
  விட்டுஏத்த*  மாட்டாத வேந்து.  


  வேந்தர்ஆய் விண்ணவர்ஆய்*  விண்ஆகி தண்ணளிஆய்* 
  மாந்தர்ஆய் மாதுஆய்*  மற்று எல்லாம்ஆய்*  சார்ந்தவர்க்குத்

  தன்ஆற்றான் நேமியான்*  மால்வண்ணன் தான் கொடுக்கும்* 
  பின்னால்தான் செய்யும் பிதிர்.  


  பிதிரும் மனம் இலேன்*  பிஞ்ஞகன் தன்னோடு,* 
  எதிர்வன்; அவன் எனக்கு நேரான்*  அதிரும்

  கழற்கால மன்னனையே*  கண்ணனையே*  நாளும் 
  தொழக் காதல் பூண்டேன் தொழில். 


  தொழில் எனக்குத்*  தொல்லை மால்தன் நாமம் ஏத்த* 
  பொழுது எனக்கு மற்றுஅதுவே போதும்*  கழிசினத்த

  வல்லாளன்*  வானரக்கோன் வாலி மதன் அழித்த* 
  வில்லாளன் நெஞ்சத்து உளன்.   


  உளன்கண்டாய் நல்நெஞ்சே*  உத்தமன் என்றும் 
  உளன்கண்டாய்*  உள்ளுவார் உள்ளத்து உளன்கண்டாய்*

  தன் ஒப்பான் தான்ஆய்*  உளன்காண் தமியேற்கும்* 
  என் ஒப்பார்க்கு ஈசன் இமை.


  இமயப் பெருமலை போல்*  இந்திரனார்க்கு இட்ட* 
  சமய விருந்துஉண்டுஆர் காப்பார்*  சமயங்கள்

  கண்டான் அவை காப்பான்*  கார்க்கண்டன் நான்முகனோடு* 
  உண்டான் உலகோடுஉயிர்.


  உயிர்கொண்டு உடல் ஒழிய*  ஓதும் போதுஓடி* 
  அயர்வுஎன்ற தீர்ப்பான்*  பேர் பாடி*  செயல்தீரச்

  சிந்தித்து*  வாழ்வாரே வாழ்வார்*  சிறுசமயப் 
  பந்தனையார் வாழ்வேல் பழுது.


  பழுதுஆகாது ஒன்று அறிந்தேன்*  பாற்கடலான் பாதம்* 
  வழுவா வகை நினைந்து*  வைகல் தொழுவாரைக்*

  கண்டு இறைஞ்சி வாழ்வார்*  கலந்த வினைகெடுத்து* 
  விண்திறந்து வீற்றி இருப்பார் மிக்கு. 


  வீற்றிருந்து*  விண்ஆள வேண்டுவார்*  வேங்கடத்தான் 
  பால்திருந்த*  வைத்தாரே பல்மலர்கள்*  மேல்திருந்தி

  வாழ்வார்*  வரும்மதி பார்த்து அன்பினராய்*  மற்றுஅவற்கே 
  தாழ்வாய் இருப்பார் தமர்* 


  தமர்ஆவார் யாவர்க்கும்*  தாமரை மேலாற்கும்* 
  அமரர்க்கும் ஆடுஅரவுஆர்த் தாற்கும்*  அமரர்கள்

  தாள் தாமரை*  மலர்கள் இட்டு இறைஞ்சி*  மால்வண்ணன் 
  தாள் தாமரை அடைவோம் என்று*.


  என்றும் மறந்து அறியேன்*  என் நெஞ்சத்தே வைத்து* 
  நின்றும் இருந்தும் நெடுமாலை*  என்றும்

  திருஇருந்த மார்பன்*  சிரீதரனுக்கு ஆளாய்* 
  கருஇருந்த நாள்முதலாக் காப்பு.


  காப்பு மறந்தறியேன்*  கண்ணனே என்று இருப்பன்* 
  ஆப்பு அங்குஒழியவும் பல்உயிர்க்கும்*  ஆக்கை

  கொடுத்து அளித்த*  கோனே குணப்பரனே*  உன்னை 
  விடத்துணியார்*  மெய்தெளிந்தார் தாம். 


  மெய்தெளிந்தார் என் செய்யார்*  வேறுஆனார் நீறுஆக* 
  கைதெளிந்து காட்டிக் களப்படுத்து*  பைதெளிந்த

  பாம்பின் அணையாய்*  அருளாய் அடியேற்கு* 
  வேம்பும் கறிஆகும்என்று. 


  ஏன்றேன் அடிமை*  இழிந்தேன் பிறப்பு இடும்பை* 
  ஆன்றேன் அமரர்க்கு அமராமை*  ஆன்றேன்

  கடன்நாடும் மண்நாடும்*  கைவிட்டு*  மேலை 
  இடம்நாடு காண இனி.  (2)


  இனி அறிந்தேன்*  ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம்* 
  இனி அறிந்தேன்*  எம்பெருமான் உன்னை*  இனி அறிந்தேன்*

  காரணன்நீ கற்றவைநீ*  கற்பவைநீ*  நல்கிரிசை
  நாரணன்நீ*  நன்கு அறிந்தேன் நான்.  (2)