ஏகாதசி சேவாகால பாசுரங்கள்

ஏகாதசி சேவா கால திவ்ய பிரபந்த பாசுரங்கள்

*****************************************************************************************

(1)

திருக்கண்டேன் * பொன்மேனி கண்டேன், *

திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன், -

* செருக்கிளரும் பொன்னாழி கண்டேன் *

புரி சங்கம் கைக்கண்டேன் * என்னாழி வண்ணன்பால் இன்று *

***********************************************************************

(2)

சென்னியோங்கு * தண்திருவேங்கடமுடையாய். *

உலகு தன்னைவாழநின்றநம்பீ. * தாமோதரா! சதிரா !.*

என்னையும் என்னுடைமையையும் * உன் சக்கரப்பொறியொற்றிக்கொண்டு *

நின்னருளே புரிந்திருந்தேன் * இனிஎன்திருக்குறிப்பே?

***********************************************************************

(3)

ஆரா அமுதே!. அடியேன் உடலம் * நின்பால் அன்பாயே, *

நீராய் அலைந்து கரைய * உருக்குகின்ற நெடுமாலே, *

சீரார் செந்நெல் கவரி வீசும் * செழுநீர்க் திருகுடந்தை, *

ஏரார் கோலம் திகழக் கிடந்தாய்! * கண்டேன் எம்மானே! *

***********************************************************************

(4)

பச்சைமா மலைபோல் மேனி * பவளவாய் கமலச் செங்கண் *

அச்சுதா! அமரர் ஏறே! * ஆயர்தம் கொழுந்தே ! என்னும் *

இச்சுவை தவிர யான்போய் * இந்திர லோகம் ஆளும், *

அச்சுவை பெறினும் வேண்டேன் * அரங்கமா நகர் உளானே. *

***********************************************************************

(5)

கொண்டல் வண்ணனைக் * கோவல னாய்வெண்ணெய்

உண்ட வாயன் * என்னுள்ளம் கவர்ந்தானை, *

அண்டர் கோன் அணி அரங்கன் * என் அமுதினைக்

கண்ட கண்கள் *, மற்றொன்றினைக் * காணாவே. *

***********************************************************************

(6)

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் * யாதும் இல்லா அன்று *

நான்முகன் தன்னொடு * தேவர் உலகோடு உயிர் படைத்தான் *

குன்றம் போல் மணி மாடம் நீடு * திருக்குருகூர் அதனுள் *

நின்ற ஆதிப்பிரான் நிற்க * மற்றைத் தெய்வம் நாடுதிரே *

***********************************************************************

(7)

முனியே! நான்முகனே ! * முக்கண்ணப்பா *

என் பொல்லாக் கனிவாய்த் * தாமரைக் கண் கருமாணிக்கமே.

என்கள்வா! * தனியேனாருயிரே. எந்தலை மிசையாய் வந்திட்டு *

இனிநான் போகலொட்டேன் * ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே * .

***********************************************************************

(8)

குலம்தரும் செல்வம் தந்திடும் * அடியார் படுதுயராயினவெல்லம் *,

நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் * அருளொடு பெருநிலமளிக்கும், *

வலந்தரும் மற்றுந்தந்திடும் * பெற்ற தாயினுமாயினசெய்யும் *

நலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன் * நாராயணா என்னும் நாமம் *

***********************************************************************

(9)

இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் * மாலிருஞ் சோலையென்னும்

பொருப்பிடம் * மாயனுக்கு என்பர் நல்லோர், * அவை தன்னொடு வந்து

இருப்பிடம் மாயன் இராமானுசன் மனத்து * இன்று அவன் வந்திருப்பிடம் *

என்றன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே *

***********************************************************************

(10)

இன்புற்ற சீலத்து இராமானுச * என்றும் எவ்விடத்தும்

என்புற்ற நோய் * உடல் தோறும் பிறந்து இறந்து *

எண்ணரிய துன்புற்று வீயினும் சொல்லுவது ஒன்றுண்டு * உன்

தொண்டர்கட்கே அன்புற்று இருக்கும் படி * என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே *

***********************************************************************