கருவிருத் தக்குழி நீத்தபின் காமக் கடுங்குழிவீழ்ந்து,
    ஒருவிருத் தம்புக் குழலுறு வீர்.உயி ரின்பொருள்கட்கு,
    ஒருவிருத் தம்புகு தாமல் குருகையர் கோனுரைத்த,
    திருவிருத் தத்தோ ரடிகற் றிரீர்திரு நாட்டகத்தே.

    பதவுரை

    கவளம் - யானை மதம் ஒசித்தல் - ஒடித்தல், முறித்தல் காமரு சீர் - விரும்பத்தக்க புகழ் (நற்குணங்கள், செயல்கள், திவ்யமான அழகு முதலியவற்றால் ஏற்படுவது) அன்ன - அத்தன்மையான (உவம உருபு) தாமரையாள் - மகாலக்ஷ்மி கேள்வன் - கணவன், அன்பன், தலைவன் தவளம் - வெண்மை மடந்தை - பெண்

    விளக்க உரை

    (குவலயாபீடம் என்னும்) மத யானையின் தந்தங்களை முறித்த கண்ணன்', 'காண்போரைக் கவரும் அழகும் குணமும் உடைய சீராளன்', 'குவளை மலர் போன்றும், மேகம் போன்றும் வண்ணம் கொண்ட என் மன்னன்', 'யானை போன்றவன்', 'வெண்மையான உயர்ந்த மாளிகைகள் நிறைந்த திருநாங்கூர் திவ்ய தேசத்தில் அவன் தாமரையாள் கணவன்' என்றவாறெல்லாம், பவழம் போல் சிவந்த வாயை உடைய என்னுடையப் பெண், பார்த்தன்பள்ளியில் எழுந்தருளியிருக்கும் பெருமானைப் பாடுவாள் !

    English Transaction

    'Rutted elephant's tusk remover - Kanna, most adorable Lord !', 'O ! Lotus hued Lord!', ' O ! Hue of dark cloud !', 'My King !', 'My elephant-like majestic Master !' 'In the town of Nangai, famous for white colored skyscrapper mansions, my Lord of Lotus Dame !' -- So sings my tender daughter, through her lips of coral hue, on the Lord of Paarththan-Palli. (Rutted elephant refers to the elephant, Kuvalayapeedam, sent by Kamsa to kill Krishna.) Thirumangai Azhwar imagines himself as both the mother and the devotional daughter in this pasuram.