2 எண்ணிக்கை பாடல் பாட

செக்கர் மா முகில் உடுத்து மிக்க செஞ்சுடர்ப்- 
பரிதிசூடி,* அம் சுடர் மதியம் பூண்டு* 
பல சுடர் புனைந்த பவளச் செவ்வாய்* 
திகழ் பசுஞ் சோதி மரகதக் குன்றம்* 
கடலோன் கைம்மிசைக் கண்வளர்வது போல்* 
பீதக ஆடை முடி பூண் முதலா 
மேதகு பல் கலன் அணிந்து,*  சோதி- 
வாயவும் கண்ணவும் சிவப்ப,*  மீதிட்டுப்- 
பச்சை மேனி மிகப் பகைப்ப*
நச்சு வினைக் கவர்தலை அரவின் அமளி ஏறி* 
எறி கடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து*
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர்* 
தெய்வக் குழாங்கள் கைதொழ கிடந்த* 
தாமரை உந்தித் தனிப் பெரு நாயக* 
மூவுலகு அளந்த சேவடியோயே! (2)