2 எண்ணிக்கை பாடல் பாட

காரார் வரைகொங்கை கண்ணர் கடலுடுக்கை*
சீரர் சுடர்சுட்டி செங்களுழிப் பெராற்று*
பெரார மார்பின் பெருமா மழைக்குந்தல்*
நீராரவெலி நிலமங்கை என்னும்* இப்
பாரோர் சொலப்பட்ட மூன்னன்றெ*  (2) -- அம்மூன்றும்

ஆரார் எனச்சொல்லி ஆடும் அதுகண்டு* 
ஏரார் இளமுலையார் அன்னையரும் எல்லாரும்* 
வாராயோ என்றார்க்குச் சென்றேன் என்வல்வினையால்*
காரார் மணிநிறமும் கைவளையும் காணேன் நான்*
ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன்* -- அறிவுஅழிந்து

ஆரானும் கற்பிப்பார் நாயகரே? நான்அவனைக்
காரார் திருமேனி காணும் அளவும்போய் 
சீரார் திருவேங்கடமே திருக்கோவ 
லூரே*(2)--மதிள்கச்சி ஊரகமே பேரகமே
பேரா மருதுஇறுத்தான் வௌ¢ளறையே வெஃகாவே 
பேர்ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர் 
ஆராமம் சூழ்ந்த அரங்கம்*--கணமங்கை  (2)