விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திரிதந்து ஆகிலும்*  தேவபிரான் உடைக்*
    கரிய கோலத்*  திருவுருக் காண்பன் நான்*

    பெரிய வண் குருகூர்*  நகர் நம்பிக்கு ஆள்-
    உரியனாய்*  அடியேன்*  பெற்ற நன்மையே*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

திரிதந்தாகிலும் - (பகவத் விஷயத்தோடு ஒட்டற்றுத்) திரிந்தேனாகிலும்;
கரிய - (நீலமேகம்போற்) கறுத்ததாய்;
நான் காண்பன் - நான் ஸேவிப்பேன்;
உரிய ஆள் - ஆய் அந்ந்யார்ஹ சேஷபூதனாயிருந்துவைத்து;
அடியேன் பெற்ற - நன்மை அடியேன் பெற்றபேறு இது காணீர்;
 

விளக்க உரை

“தேவுமற்றறியேன” என்றார் கீழ்ப்பாட்டில்; இதில் தேவுமற்று அறிவேன் என்கிறார். ஆழ்வார் பற்றின விஷயமென்று அவ்வழியாலே பற்றலாகும் என்கிற ரோஸ்த்ரார்த்தத்தை விளக்குகிறபடி. “விட்டுசித்தர் தங்கள் தேவரை வல்லபரிசு வருவிப்பரேல் அது காண்டுமே” என்றாளிறே ஆண்டாளும். ஆணையின்மேலே ஏற நினைப்பார். தாமாக ஏறப்புக்கால் உதைபடுவர்; விரகறிந்த பாகன் மூலமாக ஏறினால் அது முறைமையாகும்; அப்படியேயாய்த்து பகவத்விஷயப்பற்றும்.

English Translation

I roam but everywhere I see, my Teva-piran, his charming face. Through service to the Kurugur King, this lowly-self has found his grace.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்