விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பக்கம் கருஞ் சிறுப்பாறை மீதே*  அருவிகள் பகர்ந்தனைய* 
    அக்குவடம் இழிந்து ஏறித் தாழ*  அணி அல்குல் புடை பெயர* 
    மக்கள் உலகினிற் பெய்து அறியா*  மணிக் குழவி உருவின்*
    தக்க மா மணிவண்ணன் வாசுதேவன்*  தளர்நடை நடவானோ     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கரு - கருநிறமான
சிறு - சிறிய
பாறை - மலையினுடைய
பக்கம் மீது - பக்கத்திலே
அருவிகள் - நீரருவிகள்

விளக்க உரை

உரை:1

கருநிறத்தையுடைய திருவரையிற் சாத்திய வெண்ணிறமான சங்குமணி வடமானது, தளர்நடை நடக்கும்போது முன்பின்னாக மாறிமாறி ப்ரகாசிப்பதானது – கரிய சிறுமலையின் பக்கத்திலே வெள்ளருவி மேடும்பள்ளமுமான இடங்களில் ப்ரகாசிப்பதை ஒத்திருக்கும்படி. அல்குல் – தொடையிடுக்குக்கும் அரைக்கும் இடையிலுள்ள இடம். பாறை – இலக்கணையால் மலையை உணர்த்திற்று. பகர்ந்தனைய – ‘பகர்ந்ததனைய‘ என்பதன் விகாரம். அன்றி வினையெச்சத் திரிபாகக் கொண்டு – பகர்ந்தால் (அதை) அனைய என்று கொள்ளினுமாம். பக்கம் – ‘பஷம்‘ என்ற வடசொல் திரிபு. குழ – இளமை: உரிச்சொல்; அதனை உடையது குழவியெனக் காரணக் குறி; இ-பெயர் விகுதி.

உரை:2

மலையின் மேலுள்ள, கரிய, சிறிய, சிறிய பாறைகளின் இடுக்குகளிலிருந்து வழிந்தோடும் அருவிநீரின் மேல், சூரிய ஒளியோ, சந்திர ஒளியோ படுகின்ற வேளையில் அந்நீர் பிரகாசிப்பதைப் போன்றது குட்டிக்கண்ணனின் இடையில் அணிந்துள்ள அரைஞாண்கயிற்றில் உள்ள சங்குமணிகள், அவன் நடக்கும் போது, இடுப்பிலுள்ள மேடு, பள்ளங்களில் ஏறி, இறங்கி அசைந்தாட இப்பூமியிலுள்ள மாந்தர் எவருக்கும் வாய்த்திராத அளவுக்கு அழகுடைய என் மழலைச் செல்வமே மேன்மையான, பெரிய நீலமணியின் வண்ணனே, வாசுதேவா தளர்நடை நடவாயோ!

 

English Translation

Like a stream that winds its way down a dark mountain appears like a fluttering ribbon of light, the silver waistband of my dark gem-hued Lord Vasudeva goes up down as he moves his hips. Gem of a child such as the world has never seen, is he going to come toddling now?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்