விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க*  மாநிதி கபிலைஒண் கண்ணாடி முதலா,* 
    எம்பெருமான் படி மக்கலம் காண்டற்கு*  ஏற்பன ஆயின கொண்டுநன் முனிவர்,*
    தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ?*  தோன்றினன் இரவியும் துலங்குஒளி பரப்பி,* 
    அம்பரதலத்தில் நின்று அகல்கின்றது இருள்போய்*  அரங்கத்து அம்மா பள்ளி! எழுந்து அருளாயே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வழங்க - (தேவரீருக்கு ஸமர்ப்பிப்பதற்காக)
வம்பு அவிழ் - பரிமளம் மிகுந்த
வாயுறை - அறுகம்புல்லும்
மா - சிறந்த
நிதி - சங்கநிதி பத்மநிதிகளும் (கையிலே யுடையாயக் கொண்டு)

விளக்க உரை

தேவரீருக்குசமர்பிப்பதற்காக சிறந்த மாநிதியான சங்கநிதி மற்றும் பத்மநிதிகளை கையிலே வைத்துக்கொண்டு தேவர்களும், காமதேனுவும், ஒளி பொருந்திய கண்ணாடி மற்றும் தேவரீருக்குகண்டருள்வதர்க்குஉகக்கும் அனைத்து உபகாரங்களையும் எடுத்துக் கொண்டுமகரிஷிகளும், நாரதரும் வந்து நின்றார்கள். கதிரவனும் தன்னுடைய தேஜஸ்சை எங்கும் பரவச் செய்து உதயமாக, இருளானதுஆகாசத்திலிருந்துநீங்கியது. அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாய் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார் இந்த பாசுரத்தில்.

English Translation

With celestials reciting sonorously, the great cow Kapila in front and a beautiful mirror held aloft the good sages stand on their toes for a glimpse of your face. The celestial bards Tamburu and Narada have entered. The Sun has made his appearance with radiant rays. The darkness of the hall has disappeared. O Lord of Arangam, pray wake up

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்