விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    படர் பங்கைய மலர்வாய் நெகிழப்*  பனி படு சிறுதுளி போல்* 
    இடங் கொண்ட செவ்வாய் ஊறி ஊறி*  இற்று இற்று வீழநின்று* 
    கடுஞ் சேக் கழுத்தின் மணிக்குரல் போல்*  உடை மணி கணகணென* 
    தடந் தாளிணை கொண்டு சாரங்கபாணி*  தளர்நடை நடவானோ   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

படர் - படர்ந்திருக்கிற (பெருத்திருந்துள்ள
பங்கயம் மலர் - தாமரைப்பூ
வாய் நெகிழ - (மொட்டாயிராமல்) வாய் திறந்து மலர
பனிபடு - குளிர்ச்சி பொருந்திய
சிறு துளி போல - (தேனினுடைய) சிறுத்த துளியைப்போலே

விளக்க உரை

உரை:1

(தடந்தாளித்யாதி முதற்பாட்டிற்போல் பொருள் காண்க.) மலர்ந்த தாமரைப்பூவில் நின்றும் தேன் சிறுசிறு துளியாய்ப் பெருகி வடிவதுபோலத் தனது வாயில் நின்றும் இடைவிடாமல் ஜலம் பெருகவும், எருது நடந்து போம்போது அதன் கழுத்திற்கட்டிய மணி கணகணவென்று சப்திப்பது போலத் திருவரையில் சாத்திய மணி சப்திக்கவும் தளர்நடை நடந்து வரவேணுமென்கை.

உரை:2

அகன்று, விரிந்த செந்தாமரை மலரின் வாய் திறக்கப்பெற்று, அதனின்று ஊறி வரும் குளிர்ந்த, இனிமை மிகுந்த தேனின் துளியினைப் போலகுட்டிக்கண்ணனின் பெரிய, செந்தாமரை இதழினை ஒத்த வாயினின்று மேலும் மேலும் ஊறி, முறிந்து முறிந்து கீழே ஒழுகி விழ, நின்று.கடுமையான பார்வை, செயல், சுபாவம் கொண்ட காளைமாடு. வலிமை மிகுந்த, கொடுங்கோபமுடைய காளைமாட்டின் கழுத்திலுள்ள மணிகள் ஒன்றையொன்று வேகமாக உரசி எழுப்பும் கனத்த ஒலியினைப் போல, நின் திருவரையில் உள்ள அரைஞாண்கயிற்றில் கோர்க்கப்பட்ட மணிகள் கண கண என சப்திக்ககடுமையான பார்வை, செயல், சுபாவம் கொண்ட காளைமாடு. வலிமை மிகுந்த, கொடுங்கோபமுடைய காளைமாட்டின் கழுத்திலுள்ள மணிகள் ஒன்றையொன்று வேகமாக உரசி எழுப்பும் கனத்த ஒலியினைப் போல, நின் திருவரையில் உள்ள அரைஞாண்கயிற்றில் கோர்க்கப்பட்ட மணிகள் கண கண என சப்திக்க.

English Translation

Dropping pearls of nectar like freshly-opening lotus buds, his red lips dribble with hanging drops of mount nectar. With his waist-bells clanging like the bell on a stud bull’s neck, --my Sarangapani, --is he going to come toddling now?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்